உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளித்தலையில் அதிகாலையில் பயங்கரம்; விபத்தில் 5 பேர் பலி

குளித்தலையில் அதிகாலையில் பயங்கரம்; விபத்தில் 5 பேர் பலி

கரூர்: குளித்தலையில் அதிகாலையில், அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் டிரைவர் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை - கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸின் அடியில் கார் சிக்கிக் கொண்டதால் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பெரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zmrsd4ur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கார் பஸ்ஸின் அடியில் சிக்கி உடல்களை மீட்க முடியாததால் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி காரின் இடிபாடுகள் இடையே சிக்கிய ஐந்து பேரின் உடல்களையும் மீட்டனர். ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றிய குளித்தலை போலீசா,ர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இறந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் 52. என்றும் அவர் தனது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோருடன் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இது விபத்தில் காரினை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார்.விபத்து நடந்த இடத்தில் கரூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, குளித்தலை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, வட்டார போக்குவரத்து அலுவலர் மீனாட்சி, போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் அசோகன், சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

R.P.Anand
மார் 04, 2025 15:17

பைக் ஒட்டும் போதும் நடு ரொடல தான் போரண்ணுங்க அப்புறம் கார் வாங்கி ஓட்டி நாளும் அதே போல ஒட்டுரணுங்க . அப்புறம் என்ன செய்ய


Sampath
பிப் 27, 2025 21:07

பஸ் டிரைவர் பொறுப்பாகதான் போய் இருப்பார். ஒவர் டேக் செய்யும் போது எதிரில் வரும் வாகனத்தை கவனித்து செய்ய வேண்டும். கார் பஸ்ஸுக்கு அடியில் எப்படி போகும். அடிப்படை வேகம் அதீதமாக இருந்திருக்கும்


Krishnamurthy Venkatesan
பிப் 26, 2025 13:59

high beam head lights இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். வண்டிகள் ஒன்றுக்கொன்று ஹெட் லைட்ஸ் ஐ dim செய்து மற்ற வண்டிகளுக்கு வழி காட்ட வேண்டும். mercury விளக்கை நீக்க வேண்டும்.


தமிழன்
பிப் 26, 2025 13:32

மாருதி கார்களின் தரம் இதுதான் பெட்ரோல் செலவை குறைக்கலாம் ஆனால் உசுருக்கு கேரண்டி கிடையாது வெறும் சீமெண்ணெய் தகரம் இதே டாடா கார்களாக இருந்திருந்தால் உசுராவது மிச்சபட்டிருக்கும் 95% கார்கள் தரமில்லாத பாடி நகரத்திற்குள் ஓட்ட வேண்டுமானால் இதை வாங்கலாம் ஆனால் தொலைதூர பயனங்களில் இதை நம்பி பயனிப்பது ரிஸ்க்தான்


crap
பிப் 26, 2025 17:32

பஸ் எந்த டிராக்ல வந்திருக்குனு பார்த்திட்டு அப்புறம் கருத்து போடுங்க. உங்க டிராக்ல திடீர்னு ஒதுங்க இடமே கொடுக்காம ஏறி வந்தால், மெர்சிடிஸ் பென்ஸ்சும், பி.எம்.டபிள்யு கார்கள் மட்டும் உங்களை காப்பாத்திடுமா?


M.Dharmalingam
பிப் 26, 2025 12:18

Avoid night travel


RAAJ
பிப் 26, 2025 11:20

வெகு தூரம் பயணம் செய்பவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும்போது நல்ல நாள் பார்த்து கிளம்ப வேண்டும் நல்ல நேரம் பார்த்து கிளம்ப வேண்டாம் நல்ல ஹோரையில் கிளம்ப வேண்டும் சகுனம் பார்த்து கிளம்ப வேண்டும் இன்றைய தினம் சூலம் பார்த்து கிளம்ப வேண்டும் போகும் திசையில் சூலம் இருந்தால் அதற்கு உண்டான பரிகாரம் செய்து கிளம்ப வேண்டும்.


siva
பிப் 26, 2025 11:17

பாவம் தெரியாமல் நடந்த தவறு


Indian
பிப் 26, 2025 10:04

அந்த ரோடு எப்போதும் dangerous . பஸ் மற்றும் கார் அதி வேகமாக தான் போகும்


ديفيد رافائيل
பிப் 26, 2025 11:17

Road dangerous னா over speed போக கூடாது


ديفيد رافائيل
பிப் 26, 2025 09:56

சாகட்டும் தப்பே இல்லை. Over speed போனா இது தான் நடக்கும். Average speed போயிருந்தா ஓரளவு control கிடைச்சிருக்கும். சாகட்டும். இவர்கள் மரணத்தை இவர்களே தேடிக் கொண்டனர்.


crap
பிப் 26, 2025 17:11

ஓவர் ஸ்பீட்ன்னு நீங்க பார்த்தீங்களா? போயி வீடியோ பாருங்க பஸ் எந்த டிராக்ல வந்திருக்குனு.


m.arunachalam
பிப் 26, 2025 08:25

தவிர்க்க முடிந்த விபத்து . மனதை பழக்காத பக்குவப்படாத ஓட்டுநர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை