உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்களில் பெண்களை துரத்திச் சென்ற தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை; அன்புமணி வலியுறுத்தல்

கார்களில் பெண்களை துரத்திச் சென்ற தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை; அன்புமணி வலியுறுத்தல்

சென்னை; கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, தி.மு.க., கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும், கவலையும் அளிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இது வரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்ததாலா? அல்லது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, தி.மு.க., கொடி கட்டப்பட்ட காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ray
ஜன 29, 2025 22:38

இன்னும் யார்யார் ருக்கா எல்லாரும் வாங்க வந்து வலியுறுத்தங்க இல்லாட்டி புகார்மேல நடவடிக்கை எடுக்க மாட்டாங்க இருக்கற இல்லாத எல்லா டீவிலயும் மூஞ்சகாட்டி பேட்டி கொடுங்க மக்களும் ஒங்கள நினைப்புல வச்சிக்குவாங்க


Ramesh Sargam
ஜன 29, 2025 20:15

குற்றம் புரிந்த அந்த வாலிபர்களின் பெற்றோர்கள் யார் என்று அறிந்து, அவர்களையும் கடுமையாக தண்டிக்கவேண்டும், ஏன் இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றீர்கள் என்று கேட்டு.


முக்கிய வீடியோ