வாசகர்கள் கருத்துகள் ( 1 )
So it shows DMK and Congress have alliance in 3Cs. also.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, தொழில் அதிபர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 3வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், 10 ஆண்டுகளாக தொழில் அதிபர் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.அப்போது, முத்து வசித்து வரும் வீட்டின் முன் பகுதியில், கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு, அரசின் சார்பில் வழங்கப்பட்ட கார் பாஸ் ஒட்டப்பட்டு இருந்தது.அந்த கார் வினோத் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்து விட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.எனினும், அவருக்கு அரசு வழங்கிய கார் பாஸ் எப்படி கைமாறியது. எம்.எல்.ஏ.,வுக்கும், முத்துவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
So it shows DMK and Congress have alliance in 3Cs. also.