தொழிலதிபர் மகள் வீட்டில் 2வது நாளாக ஈ.டி., சோதனை
சென்னை:சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தொழில் அதிபரின் மகள் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.சென்னை அபிராமிபுரம், சேமியர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது தந்தை தொழில் அதிபர். போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கி உள்ளார். ஆண்டாள் வீட்டில், வருமான வரித்துறை அளித்த தகவலின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.