உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,விற்கு மூடு விழா நடத்தும் இபிஎஸ்: தினகரன் காட்டம்

அ.தி.மு.க.,விற்கு மூடு விழா நடத்தும் இபிஎஸ்: தினகரன் காட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி: தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும். ஆனால், அனைவரின் எண்ணப்படி கட்சி ஒன்றிணைவதற்கு பழனிச்சாமி முட்டுக்கட்டையாக உள்ளார். பதவி வெறியால் இப்படி குறுக்கே நிற்கிறார்.அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் தான் எதிர்காலத்துக்கு நல்லது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,விற்கு பழனிசாமி மூடு விழா நடத்தி விடுவார். அதற்குள் நிர்வாகிகள் விழித்துக் கொண்டு, ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே அ.தி.மு.க., தப்பிக்க முடியும்.முதல்வர் ஏற்கனவே வெளிநாடு சென்றபோது ஈர்த்த முதலீடுகளில் என்ன பயன் கிடைத்துள்ளது.எத்தனை தொழிற்சாலைகள், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.தற்போது, அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். தமிழகம் திரும்பும்போது எவ்வளவு முதலீடு கொண்டு வருகிறார் என பார்ப்போம். ஆந்திராவிற்கு மட்டும் மத்திய அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கி உள்ளது; தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்துள்ளது என்று கூறுவது தவறு. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான நிதிநிலை அறிக்கை தான் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.பா.ஜ.,விடம் தி.மு.க., மண்டியிட்டுக் கிடக்கிறது. 2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று தெரிவதால் பா.ஜ.க.,விடம் தி.மு.க., மண்டியிட்டுள்ளது. கருணாநிதி நாணயம் வெளியிட்ட நிகழ்ச்சியில், தமிழக அரசு அழைத்ததால், மத்திய அமைச்சர் வந்துள்ளார். இதனால், தி.மு.க.,விற்கும் பா.ஜ.க.,விற்கும் உறவு இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஆக 31, 2024 07:12

பாஜக திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்றில் அதிமுகவை ஒழித்துக்கட்ட உதவியது அதிமுகவின் ஆணவமும், பழைய கனவில் இருக்கும் அதன் நிர்வாகமும்தான்.


Kumar
ஆக 31, 2024 07:08

உண்மை உண்மை உண்மை 2026 தேர்தல் மிக குறுகிய காலமே உள்ளதால் பிளவு பட்டு இருக்கின்ற அதிமுக கிளை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒற்றைத் தலைமையின் கீழ் அடிமட்ட தொண்டன் முதல் தலைவர் வரை அனைவரும் ஒன்றிணைந்து ஒரே மனதாக முழு வீச்சில் எதிரியை வீழ்த்தே தீர வேண்டும் என்று சபதம் எடுத்தால் மட்டுமே புரட்சித்தலைவி அம்மாவின் கனவான அதிமுக கட்சி 100 ஆண்டுகள் ஆனாலும் யாராலும் அழிக்க முடியாது என்ற அந்த முழக்கத்திற்கு வலு சேர்க்க முடியும் இல்லாவிடில் ஐயா தினகரன் சொல்வது போல நிச்சயமாக இந்த கட்சிக்கு மூடு விழா தான் புரட்சித்தலைவி அம்மா இருக்கும்பொழுது ஒற்றைத் தலைவராக எந்த கூட்டணியும் இல்லாம ஒரே கட்சியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார் என்பது வரலாறு அப்படிப்பட்ட வலுவான கட்சியை இன்று புயலில் சேதம் அடைந்த மரம் போல் இன்று காட்சியளிக்கிறது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி செய்த மீண்டும் திரும்ப வேண்டும் இதுதான் பல்லாயிரக்கணக்கான தொண்டனின் எதிர்பார்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை