உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித்தகுதி ரத்து!

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித்தகுதி ரத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும். தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார். இரும்புகரம் கொண்டு ஒடுக்குவதற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வருங்காலத்தில் இது போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வி துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ramesh Sargam
பிப் 14, 2025 21:47

முதலில் யார் அந்த சார்? இதற்கு பதில் கூறுங்கள்.


C.SRIRAM
பிப் 08, 2025 11:32

இதெல்லாம் போதாது . நிரந்தர ஆண்மை நீக்கம் , வேலை டிஸ்மிஸ் , பென்ஷன் நிரந்தர ரத்து மற்றும் நிரந்தர காமந்தகன் முத்திரை ஒவ்வொருத்தனுக்கும் கட்டாயமான அவசியம் . மூஞ்சியில் கரும் உள்ளி செம்புள்ளி குத்தி ஊரு ஊராக நாயை போல இழுத்து வேண்டும் . பாஸ்போர்ட் ரத்து இந்த காமந்தகளுக்கு அவசியம் .


அம்பி ஐயர்
பிப் 08, 2025 08:10

கல்வித் தகுதியை ரத்துப் பண்ணி என்ன பயன்....??? வேற இடத்துல அதே கல்வித் தகுதியைக் காட்டி வேலை பார்க்கப் போறான்....?? அவனை வேலையிலிருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் பண்ற வழியைப் பாருங்க... அப்புறம்..... புதுசா சட்டம் எல்லாம் தமிழக அரசு கொண்டு வந்துச்சே... அதெல்லாம் என்ன ஆச்சு.... செல்லாதா...?? ஏன் நடவடிக்கை இல்லை...??


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 21:36

அவர்கள் திமுகவினராக இருந்தாலும் இந்த ரத்து பொருந்துமா ?


pv, முத்தூர்
பிப் 07, 2025 20:07

மகன் மற்றும் மகள்களை அவர்கள் பணிபுரியும் அதே அரசு பள்ளியில் படிக்க வைக்க சட்டம் இயற்றவும்.


அப்பாவி
பிப் 07, 2025 19:35

தூக்கில் போடுங்க. இல்லே கல்லால் அடிச்சு கொல்லுங்க. இதுமாதிரி காமெடி பண்ணாதீங்க.


சிந்தனை
பிப் 07, 2025 19:28

அப்படியே எல்லா அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் டிஎன்ஏ சோதனை பண்ணி, தப்பு செஞ்சிருக்கிறவங்களுக்கு, அதே தண்டனையை கொடுத்துடுங்கோ...


srian
பிப் 07, 2025 19:21

ஊழல் மற்றும் பொறுக்கிதனத்தில் ஈடுபடும் திமுக அரசியல்வியாதிகளுக்கும் இது போன்ற தண்டனை உண்டா? உங்களை போல பொய் சொன்னாலும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்..


பாலா
பிப் 07, 2025 18:58

யார் பேசுவது என்று தெரியுதா? லுலுநிதியின் வால் என்ன தகுதியிருக்கு இவருக்கு.


சுராகோ
பிப் 07, 2025 18:23

அடிப்படையில் தமிழ் நாட்டில் எங்கோ பிரச்சினை இருக்கிறது ஒழுக்கம் இல்லாத மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.


புதிய வீடியோ