உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.49 கோடியில் மாதவரம் ரெட்டேரி மேம்பாடு   மழைகாலத்திற்கு முன் பணி முடிக்க முயற்சி

ரூ.49 கோடியில் மாதவரம் ரெட்டேரி மேம்பாடு   மழைகாலத்திற்கு முன் பணி முடிக்க முயற்சி

சென்னை, :மாதவரம், ரெட்டேரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்கவும், சுற்றுலா தலமாக்கவும், துார் வாரி மேம்படுத்தும் பணியை மழைக்காலத்திற்கு முன் முடிக்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.சென்னை மாதவரம் தாலுகாவில் உள்ள, ரெட்டேரியை துார்வாரி, ஏரியின் எல்லையில் பலமான கரைகள் அமைத்த்தல், மழைக்காலத்தில் அதிக தண்ணீர் வந்தால் அதை வெளியேற்ற ரெகுலேட்டர்கள் அமைத்தல், பறவைகளுக்காக ஏரியின் நடுவில் நான்கு மண் திட்டுக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 43.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான புழல், எம்.ஜி.ஆர்., நகர், பி.ஆர்.எச்., சாலை, சுப்ரமணியம் நகர், செக்ரட்டரியேட் காலனி ஆகியவற்றின் ஒரு பகுதியில் இருந்த, ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.அந்த இடத்தில், உறுதியான கரைகள் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. நேரு நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள பகுதிக்கும் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது.ஏரியின் உபரி நீர் கூடுதலானால், அதை வெளியேற்றும் வகையில் ரெகுலேட்டர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மாதவரம்-, புழல் ஜி.என்.டி., சாலையை ஒட்டி, ஏரியின் கரை அமைத்து, ஏரியின் தண்ணீர் பரப்பை முழுமையாக பார்க்கும் வகையிலான கட்டுமானமும் அமைக்கப்பட்டு வருகிறது. ஏரியில் உள்ள தண்ணீரை முற்றிலும் வடித்து, ஏரியின் மேடான பகுதியை ஆழப்படுத்தி, ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும், ஏரியை துார்வாரி பெறப்பட்ட மண்ணை பயன்படுத்தி, ஏரியின் உள்பகுதியில் பறவைகள் மற்றும் பிற பல்லுயிர்கள் வாழும் வகையில், நான்கு மண் திட்டுகள் அமைக்கும் பணியும், முடியும் நிலையில் உள்ளது. ஏரியின் தண்ணீர், குடிநீருக்கு பயன்படுத்தப்பட உள்ளது. அதனால் ஏரியின் அடித்தளத்தில் படிந்துள்ள, கழிவு மண் அகற்றப்பட்டு, அரசு கிடங்கு மற்றும் பம்மதுகுளம் எராங்குப்பம் பகுதிகளில், புழல் ஏரியின் கரைகளை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.ஏரியின் கரையில் நடைபாதையை சீர் செய்து, தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த ஏரியின் அனைத்து மேம்பாட்டு பணிகளும், வரும் பருவமழை காலத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்து, மாதவரம் ரெரட்டை ஏரியின் பழைய கொள்ளளவு 32 மில்லியன் கன அடியிலிருந்து 45 மில்லியன் கன அடியாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி