உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டணம்; 6 மாவட்டத்திற்கு அவகாசம்

மின் கட்டணம்; 6 மாவட்டத்திற்கு அவகாசம்

சென்னை: விழுப்புரம் உட்பட ஆறு மாவட்ட மின் நுகர்வோர்கள் அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த வரும், 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திக்குறிப்பு:

'பெஞ்சல்' புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, அபராதம் இன்றி செலுத்த, வரும் 10ம் தேதி வரை, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, புயலால் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் வைத்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ