உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொபைல் போன் வாங்க ரூ.10,000! ஊழியர்களுக்கு தருகிறது மின்வாரியம்

மொபைல் போன் வாங்க ரூ.10,000! ஊழியர்களுக்கு தருகிறது மின்வாரியம்

சென்னை: மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, 'டேப்லெட்' வாங்கும் விலையில், 10,000 ரூபாய் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, மின்வாரிய ஊழியர்கள் கணக்கு எடுக்கின்றனர். இதற்காக, கணக்கெடுப்பு செயலி ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், ஒரு, 'ஆப்டிகல் பைபர்' கேபிளும் வழங்கப்பட்டுள்ளது. இதை, மீட்டர் மற்றும் மொபைல் போனுடன் இணைத்து செயலியை இயக்கியதும், மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விபரம் செயலியில் பதிவேற்றப்படும். அதை தொடர்ந்து, மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அலுவலக, 'சர்வர்' மற்றும் மின் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செல்லும். சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், படிப்படியாக மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் செயலியில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, தனி மொபைல் போன் அல்லது கையடக்க கணினியான, 'டேப்லெட்' வாங்கி தருமாறு, மின் வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, 'டேப்லெட்' வாங்கும் விலையில், 10,000 ரூபாய் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மொபைல் போன் வாங்கிய பின், அதன் விலையில், 10,000 ரூபாயை மட்டும் நிர்வாகம் வழங்கும். இதற்கு பதில் நிர்வாகமே மொபைல் போன் வாங்கி தருமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக, 'எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்' பொதுச்செயலர் சேக்கிழார் கூறியதாவது:மொபைல்போனுக்கு, 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று, உச்சவரம்பு நிர்ணயிக்க கூடாது. தரமான போன் வாங்கினால் அதிக நாள் வரும். எனவே, சந்தையில் முன்னணி நிறுவனத்தின் மொபைல் போன் என்ன விலைக்கு வாங்கப்படுகிறதோ, அந்த தொகை முழுதும் தர வேண்டும். இல்லையெனில், நிர்வாகமே தரமான போன் அல்லது 'டேப்லெட்' வாங்கி தர வேண்டும். அதுமட்டுமின்றி, மொபைல் போன் செயலியை இயக்குவதற்கான, 'இன்டர்நெட்' கட்டணத்தையும் ஊழியர்களுக்கு, நிர்வாகம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

guna
மார் 24, 2025 10:44

அவர்கள் வாங்கும் லஞ்சதில் iphone கூட வாங்கலாம்...


ديفيد رافائيل
மார் 24, 2025 08:26

Phone and internet இரண்டுமே சொந்த பயன்பாட்டுக்காக கேட்கின்றனர் கேடுகெட்ட TNEB staffs


Amar Akbar Antony
மார் 24, 2025 07:45

அடேய் ரொம்பவே கேவலமாக இருக்குது. ஒருபக்கம் மின்வாரியம் நஷ்டத்தில் இருக்கிறது. மறுபக்கம் இலஞ்சம். தேவையில்லாமல் யாரும் கேட்காமல் எப்படி இவர்களுக்கெல்லாம் இலவசமாக தர தோன்றியதோ. அதிலும் கமிஷன் அடிக்கத்தான். நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என்றால் அங்கும் இவர்களே. ஆண்டவரே தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்.


raja
மார் 24, 2025 06:20

கூமுட்டை கோமாளி மாடல் ஆட்சி...இப்போ எந்த ஊழியர் செல் phone இல்லாம இருக்கான்...ஏற்கனவே மின்சார வாரியம் நஸ்டத்தில் இருக்கு இவன் அப்பன் வீட்டு காசு...


Varadarajan Nagarajan
மார் 24, 2025 06:19

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கீடு செய்ய தேவையே இருக்கப்போவதில்லை. அதற்க்கு ஏற்கனவே விலைப்புள்ளி கோரி டெண்டரை வாரியம் கேன்சல் செய்துவைத்துள்ளது. பிறகு எதற்கு இந்த திட்டம். மறைமுகமாக ஊழியர்களுக்கு சலுகை அளிக்கவா? பள்ளி மாணவர்களுக்காக இலவச மடிக்கணினி வாங்க தற்பொழுது தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 2000 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வண்ண தொலைகாட்சி பேட்டி, மின் விசிரி போன்றவற்றை கொள்முதல் செய்யும்போது சந்தைவிலையைவிட மிகமிக குறைவாக கொள்முதல் செய்யமுடியும் என தமிழக அரசு பலமுறை நிரூபித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது மின்வாரியம் குறைந்தவிலையில் கையடக்க டிவைஸ்களை கொள்முதல்செய்யமுடியும். ஏற்கனவே மிகவும் நஷ்டத்தில் மின்வாரியம் இயங்குவதால் இதுபோல் வீண்செலவுகளை தவிர்க்கவேண்டும்.


Sampath
மார் 24, 2025 06:14

அவர்களுக்கு ஒரு குடை , டாய்லெட் மற்றும் டீ அல்லோவான்ஸ், இளநீர் , ஒரு சிறிய புறச் போன்றவை வாங்க மாதம் 20000 அல்லோவான்ஸ் தர சிபாரிசு செய்கிறேன் இப்படிக்கு அடிமை allowance டீ


சமீபத்திய செய்தி