வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வெறும் 917 கோடி யூனிட்டுக்கு 13,179 கோடி ரூபாய்னா ஒரு யூனிட்டுக்கு 14 ரூபா மேல வருதே இந்த கணக்குகளை எந்த ஆபீசர் தணிக்கை செய்வார்?
இலவச மின்சாரத்தை நிறுத்தி விட்டு சூரிய மின்சாரத்திற்கு subsidy கொடுங்கள்
அப்போ அந்த மேலதிக 13 கோடி ஓவா கட்டிங் கமிஷனா
சோலார் தகடுகள் அமைத்தால் போதும், நம்ம ஊர் வெயிலுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். ஆனால், சூரிய பகவான் கிட்ட இருந்து, கமிஷன் வாங்க முடியாதே.
தமிழ் நாட்டில் இனியும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லையாம் ...அப்ப எதுக்கு உப்பூர் மின் நிலையத்திற்கு இதுவரை 5,847 கோடி ரூபாய் செலவு செய்யனும்?? பத்து வருஷமாக வராத இந்த திட்டத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு. எல்லாம் லஞ்சம் கொள்ளை ...இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??....
முதல்வருக்கு தெரியாமலா இந்த ஊழல் நடந்திருக்கும்? அதில் எல்லோருக்கும் பங்கு இருப்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தேர்தல் நெருங்கி வருவதால் இன்னும் எங்கெல்லாம் சுருட்ட முடியும் அங்கெல்லாம் சுருட்டுவார்கள் தேர்தலுக்கு முன்பு எல்லோருக்கும் இலவச சாராயம், பிரியாணி, பணம் எல்லாம் கொடுக்க வேண்டாமா?
சல்லித்தனமா யாரையாவது விட்டு பீப்பி ஊதிங் செய்யாமல் தெளிவான செய்தியாக வெளியிட்ட மலருக்கு பாராட்டுக்கள்... இதில் மூன்று முக்கிய விஷயங்கள் கவனிக்கனும். முதலில் உத்தேச மதிப்பை விட அதிகமாக வாங்கியது தவறில்லை. பயன்பாடு அதிகரித்தது அதனால் வாங்கப்பட்டது. உபயோகிப்பாளர்களிடம் இருந்து வசூலும் செய்யப்பட்டது. இரண்டாவது கிட்டத்தட்ட பதிமூன்று சதவீதம் மின்வழித்தட செலவு மிக மிக அதிகம். மூன்றாவது தமிழ் நாட்டில் இனியும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லை எனும் போது ஏன் நீண்ட கால அடிப்படையில் பிபிஏ போடாமல் இவ்வளவு மதிப்பு அவசர மின்சாரம் வாங்கப்படுது?? இது சந்தேகத்தை வரவைக்குது. முக்கியமாக ஒலகமே புதுப்பிக்கத்தக்க எனர்ஜியை பயன்படுத்துது ஆனால் அதை கொள்ளை விலைக்கு வாங்குறது....?? அலோ அறப்போர் இயக்கம் காதுல விழுதா...???
சும்மா இருங்கப்பா. எலெக்ஷனுக்கு குடுக்க பணம் வேணும் . இது மக்களுக்கு செய்யற சமூக சேவை
மக்களின் ஆதங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் காதுகளை எட்டுமா? நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
தமிழக மின் வாரியத்தின் கடன் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளது. கடந்த 2020-21ல் 1.45 லட்சம் கோடியாக இருந்த கடன், 2021-2024 க்குள் 1.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடன் சுமை காரணமாக, ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டியாக செலவிட வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மின் வாரியம் வட்டிக்காக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....
அதானே... கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடியிருக்க வானாமா??