உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் மின் கட்டணம் உயர்வு; யூனிட்டுக்கு 41 காசு வரை அதிகரிப்பு

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு; யூனிட்டுக்கு 41 காசு வரை அதிகரிப்பு

சென்னை : தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், இன்று முதல், 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு, 15 காசு முதல், 41 காசு வரை அதிகரிக்கும். வீடுகளுக்கான கட்டண உயர்வை அரசு ஏற்றதால், அந்த பிரிவுக்கு கூடுதல் செலவு ஏற்படாது.அதேநேரத்தில், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும், நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், உடற்பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பிரிவுக்கு யூனிட், 8.55 ரூபாயாக இருந்த கட்டணம், 8.80 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது * குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட், 4.80 ரூபாயாக இருந்த கட்டணம், 4.95 ரூபாயாகவும்; 500 யூனிட் மேல், 6.95 ரூபாயாக இருந்த கட்டணம், 7.15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது* விசைத்தறிக்கு, 500 யூனிட் வரை, 6.95 ரூபாயாக இருந்த கட்டணம், 7.15 ரூபாயாகவும்; 501 மேல் யூனிட்டிற்கு, 8 ரூபாயாக இருந்த கட்டணம், 8.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது * தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, யூனிட்டிற்கு, 8 ரூபாயில் இருந்து, 8.25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது * தற்காலிக மின் இணைப்பு கட்டணம் யூனிட்டிற்கு, 12.85 ரூபாயில் இருந்து, 13.25 ரூபாயாக உயர்ந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
ஜூலை 06, 2025 11:31

அடுக்குமாடி வீடுகளில் நடுத்தர மக்களும் வசிக்கின்றனர் அரசுக்கு மனிதாபிமானமில்லை


lana
ஜூலை 01, 2025 20:20

மஹாராஷ்டிரா அரசு 10% மின் கட்டணத்தை குறைத்து உள்ளது. இன்னும் 26% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே முடியும் போது,திருட்டு மாடலால் ஏன் முடியாது.


lana
ஜூலை 01, 2025 20:12

எல்லாவற்றுக்கும் மத்திய அரசு தான் காரணம் என்றால் நீங்கள் எதற்கு. வீட்டுக்கு போகலாம். வெட்டி சம்பளம் குறையும்.


V RAMASWAMY
ஜூலை 01, 2025 10:48

பிரதமரிடம் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று முறையிடும் முதல்வர், இவ்வாறு மின் கட்டணம் உயர்த்தியது எவ்விதத்திலும் நியாயமில்லை. இது எளியோரை பாதிக்காதா? ஊழல்கள் அதிகரிக்கும் எல்லோரிடமும் பணம் லஞ்சப்பணம் உடன்பட வழிந்து கொட்டுக்குகிறது, ஏழை எளியோர் என்று இனி எதுவும் கிடையாது. இது சமத்துவ காலம் என்று கொக்கரிப்பவர்கள் எதற்கு இலவசங்கள் அளிக்கவேண்டும். தேவையற்ற இலவசங்களை நிறுத்துங்கள். பொருளாதாரம் மேம்படும்.


ராஜ்
ஜூலை 01, 2025 09:58

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுமா என்பதை தயவுசெய்து கேட்டு எழுதவும் ஏற்கனவே பொதுப்பயன் பாட்டுக்கு வியாபார ரீதியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:16

அடுக்குமாடிக் குடியிருப்பில் சூரிய சக்தி அமைப்புகள் கட்டாயமாக்கப் பட்டால் இந்தப் பிரச்சினை எழாது.


RAAJ68
ஜூலை 01, 2025 09:57

மின்சார கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். மேலும் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது இந்த உண்மையை யாரும் பேசுவதில்லை.


Paramasivam
ஜூலை 04, 2025 21:14

ஆமாம் நாம் செலுத்தும் மின் கட்டணம் மத்திய அரசுக்கு செல்கிறதா? அப்புறம் மத்திய அரசு எப்படி காரணமாகும்? நீங்கள் அடிக்கும் ஊழல் கொள்ளையினால் தான் இந்த கட்டண உயர்வே, அதை புரிந்து கொள்ளுங்கள்.


Venkata Krisshna
ஜூலை 01, 2025 09:23

உண்மை brother


vbs manian
ஜூலை 01, 2025 08:22

வலது கையால் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு இடது கையால் மூன்று ரூபாய் பிடுங்கும் தந்திரம். இலவச மிட்டாய் காட்டி சோற்று தட்டில் கை வைக்கிறார்கள்.


Mani . V
ஜூலை 01, 2025 04:16

கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்ல. பேசாமல் அந்நியர்களிடமே அடிமைப்பட்டு கிடந்தது இருக்கலாம்.


சமீபத்திய செய்தி