உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கான செலவை அரசு ஏற்கிறது

ஜூலை 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கான செலவை அரசு ஏற்கிறது

சென்னை : தமிழகத்தில் நாளை மறுநாளில் இருந்து மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களை உள்ளடக்கிய விரிவான கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை தயாராக வைத்துள்ளது.தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியமே மேற்கொள்கிறது. மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையம், ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ja39cqzd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இது தொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்தது.இந்த கட்டணத்தை, 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில், எந்த சதவீதம் குறைவோ, அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப, இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருப்பதாக, மத்திய அரசு மே மாதம் தெரிவித்தது. எனவே, ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த ஆணையம் முடிவு செய்தது. இந்த விபரம், மே மாதமே வெளியானதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இதையடுத்து, 'தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. எனினும், ஆணையம், ஆணை வெளியிடும்போது, வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்கக்கூடாது, இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.எனவே, 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச சலுகைகள் தொடரும்' என்று, மின்துறை அமைச்சர் சிவசங்கர், மே, 20ல் தெரிவித்தார்.இதேபோல, தொழிற்சாலைகளுக்கான கட்டண உயர்வையும், அரசு ஏற்பதாக அறிவிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தினர்.இந்நிலையில், நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.யூனிட்டிற்கு, 15 காசு முதல், 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தமிழக அரசு ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

richard immanuel
ஜூன் 29, 2025 19:00

அரசாங்கம் தோல்வி sari இல்லை கஞ்சா ,போதை , சாராயம் , கொலை கொள்ளை தான் இவர்கள் சாதன


richard immanuel
ஜூன் 29, 2025 18:57

டாஸ்மாக் ல கொள்ளை அடித்த பணம் , மற்றும் எல்ல விதத்திலும் செய்த ஊஸ்கள் மக்கள் தலைல பரம் இது தரமற்ற அரசியல் கண்டிப்பாக வரும் வரும் ....


c.mohanraj raj
ஜூன் 29, 2025 18:57

ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் போட்டா மீண்டு விடுமா மின்வாரியம் ஒவ்வொருத்தனுடைய லஞ்சப் பணத்தையும் வாங்கினால் இன்னும் நான்கு மாநிலங்களில் முதலீடு செய்யலாம்


Yasararafath
ஜூன் 29, 2025 16:16

மின் கட்டணம் உயர்வது சரி.வீடுகளுக்கு அரசு எதற்கு செலவு செய்கிறது


சிந்தனை
ஜூன் 29, 2025 15:45

ஏன் மின்சார கட்டணம் உயர்கிறது ஏனென்றால் ஏழைகளுக்கு இலவசம் மின்சாரம் கொடுக்கப்படுவதால் யார் ஏழைகள் தினசரி 500 ரூபாய்க்கு குடிக்கும் மது பிரியர்களுக்கு பெயர் ஏழைகள் யார் அதற்காக அதிக பணம் வரி கட்ட வேண்டும் பணக்காரர்கள் தான் கட்ட வேண்டும் பணக்காரர்கள் ஏன் கட்ட வேண்டும் ஏனென்றால் அவர்கள் தான் அதிகமாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் எவ்வளவு காலம் இப்படி கட்ட வேண்டும் அவர்கள் ஏழைகளாக ஆகும் வரை கட்ட வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 14:57

தொழில் வணிக நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்தினால் பின்விளைவாக விலைவாசி ஏறும். ஆக யாருக்கு கட்டணத்தை ஏற்றினாலும் பாதிப்பு பொதுமக்களுக்கே.


Guru
ஜூன் 29, 2025 11:32

மின்வாரியத்தில் ஊழலோ ஊழல். அதெப்படி லாபத்தில் இயங்கும். ஊழல் செய்த பணத்தையும் சேர்த்து மக்களிடம் புடுங்கி விடுவார்கள்.


உ.பி
ஜூன் 29, 2025 10:49

மாத ரீடிங் உங்க தேர்தல் வாக்குறுதி.. ஆனால் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கிய திராவிட மாடல் அரசு


RAMESH
ஜூன் 29, 2025 09:42

தொழில் செய்வது மிகவும் கடினம்..... இரண்டு மாதங்களுக்கு வீடுகளு க்கு மானியம் என்பார்கள்..,பிறகு நிறுத்தி விடுவார்கள்.....


Ragupathi
ஜூன் 30, 2025 12:38

தேர்தல் வரும் வரை கடன் வாங்கியாவது கட்டுவார்கள். அதன் பிறகு பிம்பிளாக்கி பிளாப்பி.


Varadarajan Nagarajan
ஜூன் 29, 2025 09:01

மின்சாரவாரியத்தின் முந்தய ஆண்டு வரவுசெலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்தபிறகுதான் மின்கட்டண உயர்வுபற்றிய ஆணையை ஆணையம் அளிக்கமுடியும். இதுதான் மத்திய மின்சார வழிகாட்டுதல். அதிமீறி தமிழ்நாடு ஒழுங்குக்குமுறை ஆணையம் ஒவொவ்ருஆணடும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ளது சட்டத்திற்கு விரோதமானது. இந்த ஆணையை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றால் செல்லாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை