உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோவை தாக்கிய யானை: பலி 1

ஆட்டோவை தாக்கிய யானை: பலி 1

மூணாறு : மூணாறு கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் காட்டுயானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்தார்.இந்த எஸ்டேட்டில் சுரேஷ்குமார் 45, பணிபுரிகிறார். ஆட்டோ டிரைவராகவும் உள்ளார். நேற்று இரவு 9:30 மணிக்கு தொழிற்சாலை ஊழியர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, வீடு சென்றார். டாப் டிவிஷன் உதவி மேலாளர் பங்களா அருகே சென்ற போது ரோட்டில் வந்த காட்டு யானை ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியது. இதில் தொழிலாளி சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணித்த இசக்கிராஜ் 46, மனைவி ரெஜினா 40, மகள் குட்டிப்பிரியா உட்பட சிலர் பலத்த காயங்களுடன் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ