உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வெட்டை தவிர்க்கவே அவசர கொள்முதல்; அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மின்வெட்டை தவிர்க்கவே அவசர கொள்முதல்; அமைச்சர் நிர்மல்குமார் பதில்

சென்னை: ''காஸ் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்பதால், ஒரு யூனிட் 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.அவர் அளித்த பேட்டி: வரும் 15 முதல் 31ம் தேதி வரை மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அது காஸ் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்பதால், ஒரு யூனிட் 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.அதன் உற்பத்தி செலவு 30 ரூபாய்க்கு மேல் ஆகிறது. இந்த மின்சாரத்தை வைத்து மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையிலான மின் தேவை சமாளிக்கப்படும். இதற்காக நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் முதல் ஏழு கோடி ரூபாய் வரை மின் வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும். மின்வெட்டு ஏற்படாமல் தேவையை பூர்த்தி செய்ய, அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது 5,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதல் தேவையை சமாளிப்பதற்கு, 500 முதல் 1,000 மெகாவாட் வரை மட்டுமே கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.நீண்ட கால டெண்டர் வாயிலாக மின்சாரம் பெறும் பணிகள், 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கும். அதுவரை தேவைக்கேற்ப குறுகிய கால ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. கொள்முதல் குறித்து தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.மின்சாரத்தின் விலை, உற்பத்தி செலவு, கிடைக்கும் அளவு, மாநிலத்திற்கு தேவையான அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே கொள்முதல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
அக் 15, 2026 11:24

முந்தைய தினம் எவ்வளவு யூனிட் மின்சாரம், இந்த 35 ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டது என்று, பிரதி தினம் தோறும் பத்திரிக்கைகளுக்கு மின்சார வாரியம் தெரியப்படுத்தலாமே. பத்திரிக்கைகள் அந்த செய்தியை முதல் பக்க பத்தியில் வெளியிட்டால் பொது மக்களும் தெரிந்து கொள்வார்களே. மேலும், தினமலர் போன்ற நாளிதழ்கள், மின்சார துறை பற்றிய செய்திகளுக்காக பிரத்யேகமாக ஒரு கால் பக்கம் ஒதுக்க வேண்டும். அந்த காலத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழை எடுத்தால் மாணவர்கள் முதலில் பார்ப்பது 14ம் பக்கம் , அதாவது கடைசி 16க்கு முந்தய தாள், ஏனெனில் அதில் தான் விளையாட்டு செய்திகள் இருக்கும்.


சத்திய சோதனை
அக் 15, 2026 04:23

இருமல் கொமாரு பேசுவது அத்தனையும் ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என் தாத்தா ஆர்டிஐல் தகவல் பெற்றார் அதில் செப்டம்பர் மாதம் 15 முதல் இன்று வரை மின்சாரம் வாங்கியதில் தினமும் 76.92 கோடி ரூபாய் செலவு ஆவதாக தகவல் பெற்றுள்ளார் ஒரு நாளைக்கே 77 கோடி என்றால் இன்று வரை 30 நாட்களுக்கு பல ஆயிரம் கோடிகள் ஆட்டைய போட்டிருக்கிறானுகள் மேலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மத்திய அரசு, எல்லா தென் மாநிலங்களுக்கும் இந்த வருடம் கடும் மின்சார தட்டுப்பாடு நிலவும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது இது எல்லா நாளிதழ்களிலும் செய்தியாக வந்துள்ளது ஒன்றிய அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கை தகவலும் தரவில்லை என்று இவன் சொல்வது அப்பட்டமான பொய் இவன் சொல்வது போல ஒரு நாளைக்கு வெறும் 5 கோடி ரூபாய் என்பது உண்மை மூடி மறைக்க ஊழல் செய்ததை மறைக்க மேலும் கிட்டத்தட்ட 3500 மெகாவாட் மின்சாரத்தை பல இடங்களில் இருந்து மிக குறைந்த விலையில் கிடைத்தும் வாங்கவில்லை காடம்பாரை மின் உற்பத்தி நிலையத்தில் 550 மெகாவாட் மின்சாரம் அரசே உற்பத்தி செய்திருந்தால் ஒரு யூனிட் மின்சாரம் வெறும் 3 ரூபாய்க்கு கிடைத்திருக்கும் அதையும் வேண்டுமென்றே உற்பத்தி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறானுகள் இதில் மெகா ஊழல் நடந்துள்ளது முற்றிலும் உண்மை இவன் வெறுமனே தினமும் தீய முகவை குறை சொல்ல மட்டுமே நியமிக்கபட்ட அமைச்சர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை