உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவு தபால் சேவை ரத்து; ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு

பதிவு தபால் சேவை ரத்து; ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு

மதுரை: தபால் துறையில் நவீனமாக்கலின் ஒரு பகுதியாக செப்., முதல், பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தபால் துறையில் சாதாரண தபால் அனுப்பும்போது அது போய் சேர்ந்ததா, இல்லையா என உறுதிசெய்ய முடியாது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவு தபால் முறை நல்ல வரவேற்பை பெற்றது. இந்த முறையின்படி, தபால் உரியவரிடம் சேர்ந்ததும், அவர் கையெழுத்துடன் ஒப்புகை சீட்டு நம் கைக்கு வந்துவிடும். தபாலின் எடையை கணக்கிட்டு பதிவு தபாலுக்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியாக, உடனடியாக 'டெலிவரி' என்ற அடிப்படையில் ஸ்பீடு போஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், பதிவு தபால் போன்றது என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பதிவு தபாலை விட ஸ்பீடு போஸ்ட் முறைக்குதான் தற்போது வரவேற்பு அதிகம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு, செப்., முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. அதுபோல் ரயில் மெயில் சேவையும் ரத்தாகிறது. இனி, இந்தியாவிற்குள் தரைவழியாக மட்டுமே தபால்கள் பிற மாநிலங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது. பதிவு தபால், ஆர்.எம்.எஸ்., சேவை ரத்துக்கு தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பரிவர்த்தனை இல்லை தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், பயன்பாட்டில் உள்ள மென்பொருளை, புதிய தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தும் பணிகள் ஆக., 2ல் நடக்கவுள்ளன. அன்று ஒரு நாள், அனைத்து தபால் அலுவலகங்களிலும், சிறுசேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற எந்தவிதமான பண பரிவர்த்தனைகளும், விரைவு தபால், பதிவு தபால், ஆதார் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்ய இயலாது என, தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Santhakumar Srinivasalu
ஜூலை 30, 2025 13:23

இதனால் தனியார் கொரியர் நிறுவனங்களுக்கு தான் கொள்ளை ஆதாயம். ஏன் என்றால் தபால் மூலம் அனுப்பினால் 30/40 சதவீகீதம் தான் செலவு!


Muralidharan S
ஜூலை 30, 2025 13:09

எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள், ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று கேட்டால்.. சுத்தமாக கிடையாது.. ஒரு முகவரிக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை , தெளிவாக முகவரி இருந்தால் கூட நாலு அபார்ட்மெண்ட் தள்ளி இன்னொரு அபார்ட்மெண்டில் வீசிவிட்டு செல்கிறார்கள்.. எவ்வளவோ புகார்கள் தெரிவித்தும் பயன் இல்லை.. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களால், மக்கள் தபால் சேவைகளை மிகவும் குறைந்த அளவு மக்கள்தான் உபயோகிக்கிறார்கள்.. தபால் நிலையங்களை மொத்தமாக மூடி விடுவது.. வரிசெலுத்தும் மக்களின் வரிப்பணத்துக்கு நல்லது.. வேலையே செய்யாமல், வேலையே சரியாக செய்யாமல், வேலையே நடக்காமல் ஒரு துறை... இந்த துறை ஊழியர்களை தனியார் துறை ஊழியர்களை போல கடுமையான சட்டம் கொண்டு நடத்தினால்தான் சரி வரும்.


J.Isaac
ஜூலை 30, 2025 11:38

விரைவில் இதுவும் தனியார்மயமாகலாம். ரயில்வேக்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள துறை, அஞ்சல் துறை.


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 30, 2025 09:29

அப்போ ஏதோ ஒரு நல்ல கம்பனி அதில் இறங்க போகிறது. சூப்பர்


J.Isaac
ஜூலை 30, 2025 11:39

ஜியோவாக இருக்கலாம்


R Hariharan
ஜூலை 30, 2025 08:51

இடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ரெஜிஸ்டெரெட் போஸ்ட் பண்ணிங்கள் பல அரசாங்க அலுவலங்கள் ப்ரோப் ஒத்துக்கொள்கிறார்கள். ஸ்பீட் போஸ்ட் முறை பல மெட்ரோ சிட்டிக்கு பொறந்துக்கும். மீண்டும் ரெஜிஸ்டெரெட் போஸ்ட் முறை வேண்டும்.


Neelachandran
ஜூலை 30, 2025 08:36

20கிராம் எடையுள்ள ஒப்புதல் அட்டையுடன் கூடிய ஒரு பதிவுத்தபால் ரூ25க்கு புக் செய்யப்படும்.அதுவே ஸ்பீடு போஸ்ட் என்றால் ரூ42 ஆகும் எனக் கருதுகிறேன்.


Chanemougam Ramachandirane
ஜூலை 30, 2025 06:44

இச்செயல் சட்ட சிக்கலை உண்டாக்கும் நீதிமன்றங்கள் தனியார் ரசீதை ஏற்கிறதா தனியாரின் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது மத்திய அரசு மறு பரீசீலனி செய்யணும் என்னஉத்தரவாதம் போய் சேர்ந்ததற்கு ஸ்பீட் போஸ்ட் சேர்ந்தது உத்திரவாதம் அனுப்புநர்களுக்கு கொடுக்குமா அல்லது வாங்கியவர் வசம் ஏதாவது ஆதாரத்தை பெற்று அனுப்பியவர்களுக்கு கொடுக்குமா என்பதினை உறுதி செய்யணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை