மாஜி ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு முகாம்
சென்னை:தாம்பரம் விமானப்படை நிலையத்தில், ஜூலை, 4ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.ராணுவ அமைச்சக செய்தி பிரிவு வெளியிட்ட அறிக்கை:இந்திய பாதுகாப்பு படைகளின் முன்னாள் வீரர்களுக்காக, இந்திய ராணுவத்தின் சார்பில், சென்னை தாம்பரம் விமானப்படை மைதானத்தில், ஜூலை, 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முப்படையை சேர்ந்த முன்னாள் வீரர்கள், தனியார் நிறுவனங்களில் காவல் பணி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, பொருட்கள் மேலாண்மை, சுகாதாரம், நிர்வாகம், பொறியியல் போன்ற துறைகளில், வேலை வாய்ப்பு பெற, இந்த முகாம் நடத்தப்படுகிறது.முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள், www.esmhire.comஅல்லது www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வரும் நாட்களில் நாடு முழுதும், 18 இடங்களில், இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.