உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!

வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத் தலைவர் வெங்கடேசன், இணை பொதுச் செயலர் லெனின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 8ம் தேதி நடந்த, பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை; நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே தேர்தலுக்குள் நிறைவேற்ற, முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம், கானல் நீராக போய் விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் வாயிலாக வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது.வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்ற மனநிலைக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VENKATASUBRAMANIAN
நவ 14, 2024 08:10

முடியாது என்று தெரிந்தும் ஓட்டுக்காக பொய் சொல்லி விட்டு இப்போது முழி பிதுங்கி வழிகிறது. இதுதான் திராவிட மாடல்


Kasimani Baskaran
நவ 14, 2024 05:17

தமிழக அரசு நிர்வாகம் பொய் சொல்கிறது என்று சொல்வது வெட்கக்கேடானது. கேட்க நாதியற்று இருப்பது இன்னும் மகா வெட்கக்கேடானது.


அப்பாவி
நவ 14, 2024 03:45

வங்கிகணக்குல பாஞ்சி லட்சம் வரணும்.


Jagannathan Narayanan
நவ 14, 2024 06:50

Stop your comment


சுராகோ
நவ 14, 2024 08:49

நீங்கள் வெற்று அறிக்கை விடுப்பவர்கள் தான் என்று ஒற்றுக் கொள்கிறீர்கள்.


C Viswanathan
நவ 14, 2024 02:19

இதே வாக்குறுதியை மீண்டும் அடுத்த தேர்தலில் கொடுத்து வாக்கு கேட்பார்கள். நாமும் மீண்டும் அவர்களுக்கே ஓட்டுப் போட்டு விட்டு இலவு காத்த கிளியாக காத்து நிற்பது உறுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை