உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் துரைமுருகன் மகனிடம் அமலாக்க துறை மீண்டும் விசாரணை

அமைச்சர் துரைமுருகன் மகனிடம் அமலாக்க துறை மீண்டும் விசாரணை

சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த், சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார்.அமைச்சர் துரைமுருகன் மகனும், வேலுார் தொகுதி எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில், கதிர் ஆனந்திடம் கடந்த 22ம் தேதி பத்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று காலை, அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !