உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை: சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்

சொத்துகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை: சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், வீடு, அலுவலகம் போன்ற சொத்துகளுக்கு, 'சீல்' வைக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டுள்ளது. 'டாஸ்மாக்' கொள்முதல் விவகாரம் தொடர்பாக, மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்தும், அதை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'டாஸ்மாக்' முறைகேடு விவகாரத்தில், மனுதாரர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, ''சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக நம்புவதற்கு உரிய காரணங்கள் இருந்தாலும், சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்த முடியும். அதற்கு சட்ட பிரிவு 17 அனுமதிக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே பதியப்பட்ட, 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது,'' என்றார்.அதை கேட்ட நீதிபதிகள், 'சோதனை முடிவில் ஒரு சொத்துக்கு, 'சீல்' வைக்க, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா; சீல் வைக்க எந்த சட்ட விதி அனுமதித்தது' என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு பதிலளித்து வாதாடியதாவது:அமலாக்கத் துறைக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை. எனினும், பி.எம்.எல்.ஏ., எனும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட பிரிவு 17-ன் படி, பூட்டிய பெட்டி, 'லாக்கர்' போன்றவற்றை உடைத்து திறக்க, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. தற்போதைய வழக்கில், அத்தகைய நடவடிக்கையை அமலாக்கத் துறை எடுக்கவில்லை. அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது, மனுதாரர்களின் வீடு, அலுவலகங்கள் பூட்டப்பட்டு இருந்தால், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. இதுதொடர்பான நோட்டீசை திரும்ப பெறவும், மனுதாரர்களிடம் பறிமுதல் செய்த மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம். அதை பதிவு செய்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:'சீல்' வைக்கவே அதிகாரம் இல்லாதபோது, மனுதாரர்கள் தங்கள் சொத்துகளை பயன்படுத்த, அமலாக்கத் துறை அனுமதி அளிக்கும் என்று கூறுவதன் வாயிலாக, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருப்பதாக, ஒரு அனுமானம் ஏற்படும்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைக்கும் வாதத்துக்கும் ஒத்து போகவில்லை. மனுதாரர்களுக்கு தொடர்பு உள்ளது என்று, நம்புவதற்கு காரணமான ஆவணங்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி, அமலாக்கத் துறையிடம் கேட்டிருந்தோம். ஆனால், தாக்கல் செய்தது அதுவல்ல.டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதன் முடிவுக்கு காத்திருக்காமல், மற்றவர்கள் மீது சோதனை நடத்த, அமலாக்கத் துறை சென்றது ஏன்?இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, பிரதான மனுவுக்கு நான்கு வாரத்தில் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஜூன் 19, 2025 23:14

அமலாக்கத்துறையும் , அவர்கள் எஜமானர்களும் வேஸ்ட்!


Indian
ஜூன் 19, 2025 11:55

போங்கப்பா நீங்கஞம் உங்க நீதியும். சுத்த ப்ராடு


Karthik
ஜூன் 19, 2025 10:43

தமிழக திருட்டு மாடல் அரசியல் வியாதியினர் நீதித்துறையை பணக்குவியலால் மூடி சமாதி கட்டி விட்டது கண்கூடாக தெரிகிறது. இனி எங்கு இருக்கு நீதி?? எல்லாம் "நிதி" மட்டுமே


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:38

ஆகாஷ் விக்ரம் இருவர் மீதும் FIR இல்லாத நிலையில் அமலாக்கப் பிரிவு சோதனை தவறு என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு. ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மாநில அரசு FIR போடுமா என்பது நீதிபதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். திருடர்கள் முன்னேற்றக் கழகம் கைகளில் அதிகாரம் இருக்கும் போது அமலாக்கத்துறைக்கு கண்டிஷன் போடுவது ஆபத்துதான்.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:35

திருடன்தான் போலிசைக் கண்டு ஓடி ஒளிவான். அமலாக்கத்துறை ரெய்டை முன்னமே தெரிந்து கொண்டு நாட்டை விட்டே ஓடியவருக்கும் கோர்ட் சப்போர்ட். என்றால் நாடு உருப்பட்டுவிடும்.


m.arunachalam
ஜூன் 19, 2025 08:55

ஓரிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் தகவல் கொடுத்தால் மட்டுமே உதவிக்கு வருவோம் என்று சொல்வது போல் உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் தவறு நடந்துள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும் . வேறுவிதமான வாதங்கள் நம்மை சீரழிக்கும் . தெளிதல் நலம் .


VENKATASUBRAMANIAN
ஜூன் 19, 2025 08:03

நீதிமன்றங்கள் நீதி வழங்கும் வகையில் செயல் படுகிறதா. மக்களுக்கு நம்பிக்கை போய் வருகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல


சாமானியன்
ஜூன் 19, 2025 07:52

நீதிமன்றங்கள் சட்டம், அதிகாரம் என்ற வகையில் குழப்புகின்றன. ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்ய பாராளுமன்றம் கூடி அமெண்ட்மெண்ட் செய்யலாம். மோடியின் ஆட்சியில் நீதிபதிகளும், வக்கீல்களும் நிரம்ப சம்பாதிக்கிறார்கள். கடலுக்கு பக்கத்தில் அபார்ட்மெண்ட். சுனாமி தூக்கப்போவதும் நடக்கும்.


C.SRIRAM
ஜூன் 19, 2025 07:50

அரசு அமைப்புகளை பலவீனப்படுவதில் நீதிமன்றங்களுக்குத்தான் எத்தனை அக்கறை? இத்தனை வழக்குகள் தேங்கியிருக்கும் போது ...இது மாதிரி வழக்குகளுக்கு மட்டும் எப்படி முன்னுரிமை ?. எங்கும் ஊழல்


Murugesan
ஜூன் 19, 2025 07:43

ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த திராவிட அயோக்கியனுங்களை பாதுகாக்கின்ற நீதித்துறை இந்தியாவின் சாபக்கேடு, தமிழகத்தை குடிகார நாடாக்கியவன்களை ஆதரிக்கின்ற எந்த அமைப்பும் கேவலமானது


புதிய வீடியோ