உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷுக்கு அமலாக்கத்துறை வலை

உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷுக்கு அமலாக்கத்துறை வலை

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனை தேடி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், 'டாஸ்மாக்' துணை பொதுமேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை நடத்தினர்.சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்தபின், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் அடிப்படையில், கடந்த 16, 17ல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உட்பட, 12 இடங்களில் மீண்டும் சோதனை நடத்தினர்.அதில், 'பார் டெண்டர்' மற்றும் மதுபானங்கள் கொள்முதல் தொடர்பாக, ரத்தீஷ் என்பவருடன் விசாகன், 'வாட்ஸாப்' வாயிலாக உரையாடல் நடத்திய தகவல் தெரியவந்தது. இதையடுத்து, பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில் உள்ள ரத்தீஷ் வீட்டில் சோதனை நடத்தினர். இதை முன்கூட்டியே அறிந்த ரத்தீஷ் தலைமறைவாகி விட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவர், துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. ரத்தீஷ் வெளிநாட்டிற்கு தப்பி இருக்கலாம் என்பதால், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raajanna
மே 20, 2025 22:55

வெளியே எதிர் கட்சி பாவ்லா. மறைமுகமாக பக்கா அன்டர்ஸ்டேன்டிங் டீல் இருந்து பாதுகாப்பதை மக்கள் அறிவர். திமுகவுக்கு எல்லா வகையிலும் பாஜக 100% உதவி உண்டு. மக்கள் தான் படு ஏமாளிகள்.


Barakat Ali
மே 20, 2025 09:02

பாவம் உதயநிதி.. அவருக்கு பிரச்னை இருக்காது.. ஆனால் ரொம்பத்தான் செலவாகும் .......


karthik
மே 20, 2025 08:49

உதயநிதிக்கு வேண்டிய நபர் இல்லை... மு க முத்து வாரிசு என்று மக்களுக்கு புரியும் படி செய்தி போடுங்க..


angbu ganesh
மே 20, 2025 07:57

எந்த மாநிலத்திலேயும் இந்த அவலம் இல்லப்பா


VENKATASUBRAMANIAN
மே 20, 2025 07:29

அவர்கள் வெளிநாடு போகும் வரை என்ன செய்தார்கள். ஏன் பாஸ்போர்ட் முடக்க படவில்லை.


SUBBU,MADURAI
மே 20, 2025 05:30

தும்பை விட்டு வாலை பிடிப்பதுதான் இந்த அமலாக்கத் துறைக்கு வேலையாகப் போய் விட்டது


துர்வேஷ் சகாதேவன்
மே 20, 2025 07:39

கேவலம் உதய இருந்தால் தேர்தல் பரப்புரை எதிர்கட்சி களுக்கு சிம்ம சொப்பனம் என்பதால் அவரை கைது செய்ய திட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை