உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்: முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்: முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

லண்டன்; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் முன்னிலையில், மொத்தம் 26 ஒப்பந்தங்களின் வழியே, ரூ.7020 கோடி முதலீடு கிடைத்துள்ளது.தற்போது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரண்டிருந்த பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொடுத்து வரவேற்பு அளித்தனர். செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்.தொலைதூரங்களை கடந்து உற்சாகத்துடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ganesun Iyer
செப் 03, 2025 16:10

நிலவில் திராவிட நாடு உருவாக்கப்படும்.


Ganesun Iyer
செப் 03, 2025 16:03

அடுத்து நிலவில் கால் பதித்து அடிக்கல் நாட்டுவார்.


Sridhar
செப் 03, 2025 15:05

சரி, டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் எப்போ?


Sridhar
செப் 03, 2025 15:04

எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சமேனும் ஒழுங்கா அரசியல் செய்யணும்னு நோக்கம் இருந்தா, உடனே அவுங்க வடிவேலு க்கு அக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தில் ஒரு படம் திறக்க ஏற்பாடு செஞ்சு அந்த விழாவை சிறப்பாக கொண்டாடணும். துட்டு குடுத்தா எவனுக்கும் அங்க படம் தொறக்கலாம்ங்கறத செயல்ல காண்பிக்கணும். ஆனா ஒன்னு, ஆரம்பத்திலிருந்தே இந்த மேட்டருல திருட்டு கும்பல் ஒரு தனித்துவத்தோடதான் இருந்து வந்திருக்கு. வேற எந்த கட்சிக்காரனும் இத பத்தி யோசிக்கவே இல்ல.


Kjp
செப் 03, 2025 14:49

நான் கூட உற்சாக வரவேற்பு என்று உடன் ஒரு 500 1000 பேர் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஒரு 50 பேரை கூட காணவில்லை.


Sakshi
செப் 03, 2025 12:57

எவன் ஒரிஜினாலிட்டி இல்லாம சுதரனோ, அவன் ஒழுக்கமா இருக்கமாட்டான்.


karthik
செப் 03, 2025 12:43

முக்காட ஏன் நல்லா தெரியுற மாதிரி முன்னால் பக்கத்தில் நிக்க வச்சிருக்காங்க தெரியுமா?


Manaimaran
செப் 03, 2025 11:56

அங்கயே செட்டில் ஆகிடு


sankar
செப் 03, 2025 11:26

சூட்டிங் ஸ்பாட் - வேற லொகேஷன்


R.MURALIKRISHNAN
செப் 03, 2025 11:26

கோட்டு வெயிட்டில் இவரும் இவர் வெயிட்டில் கோட்டும் இருக்குதுப்பா செட்டாகலயே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை