உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்யணும்; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்யணும்; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும், டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம்உ த்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், புதுப்பாக்கத்தை சேர்ந்த தேவமணி, ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2021ல், கர்ப்பிணியான என் மகள் சுப்புலட்சுமியை, முருகேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது, என் மகளுக்கு ரத்தப்போக்கு அதிகமானது.இதனால், பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். ஆம்புலன்ஸில் என் மகளை ஏற்றியபோது, செவிலியர்கள் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டனர்.ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என நிர்ப்பந்தித்தனர். இதனால், 8 மாத குழந்தை கருவிலேயே இறந்தது. என் மகளுக்கு உடல், மன அளவில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: ஆணையத்தின் உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லாததால், அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர்.அப்போது, ரத்த கறையை சுத்தம் செய்ய சொன்னது, முத்துலட்சுமி என்பவர் என்பது தெரிந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி கூறிய தகவல்கள், விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை. குழந்தையை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, மனுதாரருக்கு நான்கு வாரங்களுக்குள், தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.கிராம அளவில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும், பணியில் இருக்கும் வகையில், போதிய அளவில், டாக்டர், செவிலியர், மருத்துவ பணியா ளர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Venkatachalam
ஜூலை 29, 2025 14:43

எதுக்கு தெரியுமாங்கிறேன்? வர்ர பேஷண்டுகளை பிரைவேட் கிளினிக்குகளுக்கு அனுப்பி வைக்க தான். ட்ரீட்மெண்ட் கொடுக்க இல்லைங்கிறேன்.


kumaresan
ஜூலை 29, 2025 10:02

முதலில் நம் நாட்டின் மருத்துவரின் மிக அவசியமான வேலையை புரிந்துகொள்ளுங்கள் . இந்திய டாக்டர்கள் ஈகோ பார்க்காமல் நோயாளியின் புண்களை துடைத்து மருந்து போடும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்கள் . சீனியரிட்டி என்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அப்பாற்பட்டவர்கள் . நர்ஸ் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள் என்பது சமீபத்தில் உண்டான ஈகோ சம்பத்தப்பட்ட துர்பாக்கிய நிலைப்பாடு . இதை முதலில் மருத்துவ கல்லூரி பயிற்சி முதலே ஒழிக்க வேண்டும் . இந்திய டாக்டர்களை நன்றாக சேவை அடிப்படையில் பயிற்சி கொடுக்கவும் . மற்றவை தானாக சரியாகி விடும் .


V RAMASWAMY
ஜூலை 29, 2025 09:51

வாக்குறுதிகள், ஆணைகள், உறுதிமொழிகள் இவையெல்லாம் காற்றில் கலக்கும் எவருக்கும் நினைவுக்கு வராத, செயல்படுத்தப்படாத வீணான கண் துடைப்பு நிகழ்வுகள். இவை மீடியாவில் அறிவிப்புகளாக வருவதோடு சரி. யாரும் செயல்படுத்தவுவதுமில்லை, மீறினால் தண்டனைகளும் கிடையாது.


சமீபத்திய செய்தி