உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை: 'சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்பவில்லை. சபாநாயகர் மீண்டும் பழையபடியே செயல்படுகிறார்' என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் சட்டபையில் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை. கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது அவையில் நான் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதை சி.டி.,யில் பதிவு செய்து தருமாறு சபாநாயகர் அப்பாவுடன் கேட்டோம்.

2 நிமிடங்கள் மட்டுமே!

அவர்கள் 46 நிமிடங்கள் மட்டுமே சிடியில் பதிவு செய்து கொடுத்தனர்.சி.டி.,யில் பெரும்பாலான நேரம் முதல்வர், அமைச்சர்கள் பேசியது மட்டுமே இருந்தது. நான் பேசியது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இது சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதற்கு உதாரணம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தான் தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்பவில்லை. முதல்வர் ஸ்டாலின் பேசுவது மட்டும் ஒளிபரப்பாகிறது. இது தான் ஒருதலைபட்சம்.சபாநாயகர் மீண்டும் பழையபடியே செயல்படுகிறார். ஒருதலைபட்சமாக செயல்படுவது சபாநாயகருக்கு அழகல்ல. இது புனிதமான நாற்காலி. அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு தடை விதிக்கப்படவில்லை.தமிழகத்தில் ஏராளமான மக்கள் பிரச்னைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது. கேள்வி கேட்டால் அமைச்சர்களுக்கு பதில் சபாநாயகரே பதில் சொல்கிறார். வெற்றி தோல்வி என்பதல்ல, நடுநிலையோடு சபாநாயகர் செயல்பட வேண்டும் என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்தோம். தமிழகத்தில் சிந்திக்கக் கூடிய அறிவுப்பூர்வமான மக்கள் உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுவது முக்கியமில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் கடன் மட்டுமே வாங்கி எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ramakrishnan
மார் 17, 2025 17:49

அப்படியே பேசினாலும், அருவியா கொட்டிடுவாரு... கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழார் என்ற ஒன்று போதுமே.. இவரது பேச்சாற்றலுக்கு...


K.Ramakrishnan
மார் 17, 2025 17:42

உங்கள் ஆட்சியில்நடந்தது தான் இப்போது அப்படியே நடக்கிறது. உங்கள் சபாநாயகர் எப்படி செயல்பட்டார் என்பதை நாடறியும். அதே பாணியை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அரசியலில் யாரும் நேர்மையாளர்கள் கிடையாது. அவரவர் வாய்ப்பு வரும்போது பதிலடி கொடுத்து பழி தீர்ப்பார்கள்.


sethu
மார் 17, 2025 17:16

உனக்கு மரியாதை ஒரு கேடா போடா மனநலம் பாதித்தவனே . உள்ளடி வேலை செய்து ஸ்லீப்பர் தி மு க காரன் நீ யாருகிடட நியாயம் கேட்க்கிறாய் .


ஆரூர் ரங்
மார் 17, 2025 16:40

பங்காளிகளுக்குள் செல்ல சண்டை. அம்புட்டுதான்.


Narayanan
மார் 17, 2025 15:54

எடப்பாடி ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சித்தலைவராக செயல்படவில்லை . ஸ்டாலினின் வலதுகரமாகவே செயல்பட்டார் .எந்த ஒரு ஏற்றத்திற்கும் எதிர்க்குரல் இல்லை . இதில் இவருக்கு மதிப்பளிப்பதில்லை என்று வருத்தமாம். மக்களிடேயேயும் மதிப்பிழந்து வருகிறார். எல்லா துறைகளிலும் மக்களிடம் சுமைகளை ஏற்றிவிட்டது மாத்திரம் போதாமல் கடனும் வாங்கி மக்களை மேலும் கடன்காரன்களாக்கிய அற்புத ஆட்சி. பெண்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு என்று 1000 ரூபாயை கொடுத்து , இலவச பேருந்தும் கொடுத்து நாட்டை கடனுக்கு கொடுத்துவிட்டார் . விலைவாசிக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது .


अप्पावी
மார் 17, 2025 15:28

என்ன பெருசா பேசியிருக்கப் போறீங்க? பட்ஜெட்டை திட்டியிருப்பீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை