உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனியாவது சட்டம் ஒழுங்கை சரி வர கையாள வேண்டும்: இ.பி.எஸ்.,

இனியாவது சட்டம் ஒழுங்கை சரி வர கையாள வேண்டும்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆட்சியின் தவறுகளை மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, சட்டம் ஒழுங்கைக் காக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்; சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்ம நபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.ஏற்கனவே கடந்த நவம்பர் 5ம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
நவ 14, 2024 08:19

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... நான் அடிப்பது போல நடிக்கிறேன்.... நீ அழுவது போல் நடி..... இல்லையென்றால் பிஜெபி உள்ளே பூந்துரும் ???


MADHAVAN
நவ 13, 2024 17:43

சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது, உன்க ஆட்சில நடந்தது உங்களுக்கு நினைவுஇல்லையா, ட்ராபிக் போலீஸ் எட்டி உதைத்து கர்பிணிப்பெண் மற்றும் வயிற்றில் இருந்த சிசு மரணம் அடைந்தது உங்க ஆட்சிதான், அப்போ சட்டம் ஒழுங்கு எங்க போச்சு ? உங்க ஆட்சில சட்டம் ஒழுங்கு சந்திசிரிச்சது மறந்துடுச்சா ?


MADHAVAN
நவ 13, 2024 17:21

சட்டம் ஒழுங்குன்னா, உங்க ஆட்சில துத்துக்குடில துப்பாக்கிசூடு நடந்துச்சே அப்படியா ? இல்ல அப்பனும் மகனையும் ஸ்டேஷன்ல அடிச்சு கொன்னிங்களே அப்படியா ? கொடநாடுல கொலை நடந்துச்சே அப்படியா இல்ல பொள்ளாச்சில 200 பெண்களை கற்பழிக்க கூட்டிகுடுத்த அதிமுக நிர்வாகிக்கு நீங்க சிபாரிசு பண்ணுனீங்களே அப்படியா ? எப்படி னு சொல்லுங்க


prabakaran J
நவ 13, 2024 17:17

TMK focus on 2026, vijay told his party people - admk, bjp and seman will handle this


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:34

யாரோ அறிவற்ற ஒருத்தன் மருத்துவரை குத்தினதுக்கு அரசாங்கம் என்ன செய்யணுமோ அதை சரிவர செய்கிறது. மருத்துவ மனைக்கு வரும் எல்லோரையும் எக்ஸ் ரே ஸ்கேனிங் செய்யவா முடியும்? அப்படி ஏதாவது சோதனை பண்ண ஆரம்பித்தால், "நோயாளிகள் அவதி, போலீஸ் கெடுபிடி " என்று கூவுவார்கள். தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டுக் கொன்றது கூட தெரியாம இருந்தமுன்னாள் காவல்துறை அமைச்சர் லாம் திமுக ஆட்சி பற்றி பேசக்கூடாது. சிரிப்பும் கோபமும் வருகிறது.


raja
நவ 13, 2024 17:42

அதாவது உடன் பிறப்பே அறிவற்றவர்களை ஆட்சியில் அமர்த்தினார் அறிவற்றவகள் எல்லாம் கொலைகாரர்கள் ஆவார்கள் என்று ஒரு பழமொழி உள்ளது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது... அதனால் தான் நீ கொடுக்கிறாய் உன் தலைவனுக்கு இந்த முரட்டு முட்டு


Ms Mahadevan Mahadevan
நவ 13, 2024 16:10

தனிப்பட்ட விரோ தத்தில் இரண்டுபேர் அடிதுக்கொண்டால் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது அரசு செயல் இழந்து விட்டது என்று கூற கருத்து சொல்ல எல்லோரும் வந்து விடுகிறார்கள் கொடுக்கல் வாங்கல் தகராரிலு இம் அப்படித்தான். சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் வேண்டும். அது தான் குறைத்து வருகிறதே. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோலத்தான் தனி மனித ஒழுக்கம் இல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கு காக்க முடியாது. அதற்குத்தான் இங்கு நல்ல தலைவர்கள் கிடையாது


vijai
நவ 13, 2024 14:38

200 ரூபாய் பிரியாணி குவாட்டர் இலவச பயணம் ஆசைப்பட்டால் இதுதான் வாக்களித்த மக்களுக்கு தண்டனை


ஆரூர் ரங்
நவ 13, 2024 14:20

பங்காளிய பல்லு படாம திட்டுறீங்க. தில் இருந்தா போராட்டம் நடத்துங்களேன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2024 14:56

மோடி மட்டுமென்ன ?? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு சரி ......


sankar
நவ 13, 2024 14:06

சென்னை வியாபாரி கொலை, அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து, மதுரையில் திமுக கவுன்சிலர்களால் கடை சூறை - சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது சார்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 13, 2024 14:05

நம்ம முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திராவிடமாடல் ஆட்சியில் தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் உலகத்தரத்தில் செயல்பட்டு வருகின்றன என்று முந்தா நேத்துதான் டிவியில பேட்டி கொடுத்தாரு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அதுக்குள்ள இப்படி....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை