உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால், நரியும் நாட்டாமை செய்யும்.. தி.மு.க.,வை விமர்சித்த இ.பி.எஸ்.,!

சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால், நரியும் நாட்டாமை செய்யும்.. தி.மு.க.,வை விமர்சித்த இ.பி.எஸ்.,!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உலகமே மிரண்ட, மனித சமுதாயமே அரண்ட, யாரும் கேட்டிராத கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நடுரோட்டில் விட்டது மற்றும் மக்கள் நலன் காக்கும் மருத்துவத் துறையை பாழாக்கியதுதான் இந்த விடியா தி.மு.க.,வின் 40 மாத கால சாதனை.

சிங்கமும்... நரியும்...

'சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால், நரியும் நாட்டாமை செய்யும்' என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க., ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் உள்ளன. மக்கள் என்னும் சிங்கங்கள் அமைதியாக, பொறுமையாக இருப்பது இயலாமையால் அல்ல. சிங்கங்கள் பாயும் நாள் வரும், நாட்டாமை செய்யும் நரிகள் ஓட்டம் பிடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காலி பணியிடங்கள்

இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது.

கேள்வி

மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் ? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

நிரப்புக

எனவே, உடனடியாக தி.மு.க., அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bobo
செப் 08, 2024 18:01

இவர் EPS சிஎம் இருந்தபோது என்ன செய்துகொண்டு irundaru


S kannan
செப் 08, 2024 12:05

எடப்பாடிக்கு பேசவும் தெரியாது இலக்கியம் தெரியாது எங்கு சென்றாலும உளறுவதே அவருக்கு இயல்பானது மயிலாடுவதை போன்று வான்கோலியும் தனது அசிங்கமான தொகை விரித்து ஆடுவதற்கு ஆசைப்பட்டதாம் அதுபோலத்தான் எடப்பாடியும் அதே போன்று தான் இப்போது சிங்கம் கர்சிப்பதை நிறுத்தினால் நரியும் நாட்டாமை செய்யும் என்ற கருத்தினை எங்கு கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை அவருக்கு ஒன்றே ஒன்று பல்லை மட்டும் திறந்து காட்டினால் போதும் சிரித்தபடியாவது தெரியும் வேறு எதையாவது பேசினால் உளறுவதைப் போல் தான் தெரியும் உளறுவதை நிறுத்தினால் நல்லது என்பது கருத்து


Jagan (Proud Sangi)
செப் 05, 2024 19:52

இளஞ்சிங்கம் அண்ணாமலை கர்ஜனை முன் பல் இழந்த கிழட்டு சிங்கத்தின் இருமல் போன்ற சத்தம் எடுபடாது. திராவிடம் என்ற நரிகளை சிங்கம் அண்ணாமலை பார்த்துக்கொள்வார்


Venkatesan
செப் 05, 2024 15:41

கர்ஜனையா??? ஏதோ வயறு கோளாறுன்னு இல்ல நெனச்சோம்...


JaiRam
செப் 05, 2024 14:58

நரிக்குத்தான் தந்திரமாக காரியம் ஆற்றும் திறமை உள்ளது


Rajah
செப் 05, 2024 13:17

ஏன் சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தியது?


Corporate Goons
செப் 05, 2024 13:11

அண்ணாமலையை சொல்லுயிருப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை