உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.வுடன் கூட்டணி எதற்காக; இ.பி.எஸ். வெளியிட்ட விளக்க பதிவு

பா.ஜ.வுடன் கூட்டணி எதற்காக; இ.பி.எஸ். வெளியிட்ட விளக்க பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்யவும் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளதாக இ.பி.எஸ்., கூறி உள்ளார்.சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு இ.பி.எஸ்., தமது வீட்டில் விருந்து அளித்தார். அதன் பின்னர் அமித் ஷா டில்லி புறப்பட்டுச் சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=swr05hvc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., வுடனான இந்த கூட்டணி எதற்காக என்பது குறித்து இ.பி.எஸ்., தமது எக்ஸ் வலைதள பதிவில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். தமது வீட்டில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தின் போது அவருடன் ஒன்றாக சாப்பிடும் போட்டோவையும் இ.பி.எஸ்., தமது பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.தமது வலைதள பதிவில் இ.பி.எஸ்., கூறியிருப்பதாவது; மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் 2026 சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. தி.மு.க.,வின் தீய ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கும், மாநில முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த வரலாற்று தவறுகளை சரி செய்வதற்கும், வளர்ச்சி,மேம்பாடு, புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் இந்த கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு உணவில் கலந்து கொண்டு என்னை கவரவித்தற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரகாசமான வலுவான மற்றும் துடிப்பான தமிழகத்தை உருவாக்க பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வை, உறுதியான தீர்மானத்துடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.இவ்வாறு இ.பி.எஸ்., அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

S.jayaram
ஏப் 12, 2025 17:56

இப்போது இது தேவையில்லாத பேச்சு


T.Ramesh
ஏப் 12, 2025 16:18

அண்ணா திமுக தனித்து நின்ற போதும் சிறுபான்மை மதத்தினர் பெரும்பாலோர் திமுகவிற்குதான் வாக்களித்தார்கள். எனவே என்ன இருக்கிறது இழப்பதற்கு.? பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரும்.


Anbalagan
ஏப் 12, 2025 12:53

சிறுபானமையினர் ஓட்டைப் பெறமுடிய வில்லை என்று பி.ஜே.பி. யைப் பிரிந்தீர்கள்.இப்போது வக்பு சட்டத்திருத்தம் காரணமாக பி.ஜே.பி. மீது கோபம் கூடி இருக்குமே? இப்போது எப்படி சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்? பி.ஜே.பி. தமிழ் நாட்டில் ஆதரவைப் பெருக்கும் வகையில் ஏதாவது செய்துள்ளதா? நிதி வழங்காமை, ஆளுநர் வழககு தீர்ப்பு எல்லாம் தி.மு.க.விற்கு ஆதரவு தானை அ.தி.மு.க. வை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்புப் பிரசாரம் எடுபடுமா? கூட்டிக்கழித்துப் பார்த்தால் "ஆப்பரேசன் சக்சஸ் பேஷண்ட் டை டு கேஸ் தான்".


S.jayaram
ஏப் 12, 2025 18:02

எல்லாம் சரி அந்த ஆயிரம் கோடி, அன்னாபல்களைக்கழகம் சார் நான்காண்டுகளில் தமிழுக்கு செய்த வளர்ச்சிப் பணிகள் போன்றவை நித்தம் நடக்கும் பாலியல் குற்றங்களை போதை பொருட்கள் நடமாட்டம் போன்றவை அதை சமன் செய்து விடும்


K V Ramadoss
ஏப் 16, 2025 13:27

தமிழ் நாட்டில் அண்மை காலத்தில் நடந்த மோசமான நிகழ்ச்சிகளை எண்ணி, கூட்டி கழித்துப் பார்த்தால், தி மு க வை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது


தேச நேசன்
ஏப் 12, 2025 11:49

வரலாற்று தவறுகள் சரி செய்யப்படும். மிகவும் கவனிக்க வேண்டிய கருத்து. ஆன்மீகம் பூமியில் மீண்டும் ஆன்மீக அரசு அமையவுள்ளது.


Krishnamurthy
ஏப் 12, 2025 09:36

பிஜேபி உடன் கூட்டு என்பது அட சி


Dilip Dhyaneswaran
ஏப் 12, 2025 09:19

பெஸ்ட் டெஸிஸின். வாழ்க பிஜேபி அதிமுக கூட்டணி.


Chandrasekaran Balasubramaniam
ஏப் 12, 2025 09:18

இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் அவர்களை காணோமே.


Sampath Kumar
ஏப் 12, 2025 08:49

மக்கள் எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்


Indian
ஏப் 12, 2025 08:39

விளக்கம் எல்லாம் தேவை இல்லை , மக்கள் எல்லாம் புரிந்து தான் இருக்கிறார்கள் எப்படியும் தோல்வி தான் ..வாய்ப்பே இல்லை ராஜா


VENKATASUBRAMANIAN
ஏப் 12, 2025 08:12

எல்லா கட்சிகளும் ஒன்றே . இதைத்தான் முன்பு திமுக செய்தது. அரசியலில் இதெல்லாம் சகஜம். கருணாநிதி இந்திராவை பற்றி பேசாத பேச்சா. இதேபோல் கம்யூனிஸ்டுகள் விசிக மதிமுக போன்ற கட்சிகள். வைகோ ஸ்டாலினை பேசாத பேச்சா.


புதிய வீடியோ