உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்.,; ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்.,; ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: அ.தி.மு.க.,வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok8iktx1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செய்திகளில் வெளியானது போன்று நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசின் நிதி மூலம் நிறைவேற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா தான். யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், இதற்காக இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா வைக்கப்பட்டது. எனவே, பல்வேறு கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். விவாதங்களுக்கு எல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். கட்சியில் மிகவும் மூத்த தலைவர் செங்கோட்டையன் தான். அ.தி.மு.க., ஒன்றாக இணைய வேண்டும் என்று மனசாட்சிப்படி இருப்பவர். ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். என்னை தோற்கடிப்பதற்காக, ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தார் ஆர்.பி., உதயகுமார். கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார், இவ்வாறு அவர் கூறினார்கேவியட் மனு தாக்கல்இதற்கிடையே, ஓ.பி.எஸ்., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடலாம் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அ.தி.மு.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு அப்பீல் செய்தால், தங்கள் தரப்பையும் கேட்டபிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி, ஓ.பி.எஸ்., தரப்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Tetra
பிப் 14, 2025 14:49

அதிமுக ஒரு மக்கிய குப்பை. மக்கள் எறிந்து விட்டார்கள். மற்ற இரண்டு குப்பைகள் என்று போகுமோ?


Ramesh Sargam
பிப் 13, 2025 22:34

அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கியது நீங்கள் இருவருமே. இனி அதிமுக பிழைப்பது கஷ்டமே...


Sreenivas Jeyaraman
பிப் 13, 2025 17:59

பணம் புகழ்ச்சி என்பதற்கான அரசியல் சதுரங்கம்...சாமான்யமான அந்த கட்சி தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனதில் விளையாட்டு களமாகிவிட்டது...அரசியல் தலைவர்களுக்கு நல்ல சிந்தனை பிறக்கட்டும்...எல்லோருக்கும் நல்வாழ்வு பெருகட்டும்... வாழ்க தமிழ்


என்றும் இந்தியன்
பிப் 13, 2025 16:55

அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்???அப்போ எதுக்கு குழந்தே "நான் நிபந்தனை இல்லாமல் அதிமுக வில் சேரத்தயார்" என்று பெரிசா பீல் விட்டே


Tamil Inban
பிப் 13, 2025 16:20

நாளை திரும்ப ICUவுக்கு போடுவார்


Madras Madra
பிப் 13, 2025 16:18

OPS தரப்புக்கு அதிமுக வை கை விடுவது பெரிய மன கஷ்டம் தான் ஏன் EPS இவரை விலக்கி வைக்கிறார் என்று புரியவில்லை தனக்கு சமமாக யாரும் இருக்க கூடாது என்று EPS நினைக்க அவர் ஒன்றும் அம்மா வோ தலைவர் MGR ரோ இல்லை இறுதி வரை போராடி பார்க்கத்தான் செய்வார் தேவையற்ற சச்சரவு OPS ஐ விலக்கி வைத்தால் அவர் அதை ஏற்று சும்மா இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது


Kadaparai Mani
பிப் 13, 2025 18:11

அண்ணாமலைக்கு பதில் KT ராகவனை போட சொன்னால் உங்கள் கட்சி ஒத்துகொள்ளுமா .உங்கள் கருத்தும் அதேமாதிரி போடப்பட்டு உள்ளது .ஆனால் அதிமுகவினர் நல்லவர்கள் .அடுத்த கட்சி பிரச்சனையில் மூக்கை நுழைக்க மாட்டார்கள் .


Anbilkathiravan
பிப் 13, 2025 16:06

நீ பிஜேபி இடம் அடகு வைத்து இருப்பாய்......


Vijay D Ratnam
பிப் 13, 2025 14:58

ஓ.பன்னீர்செல்வம் காலாவதியான ஒரு அரசியல்வாதி. நடுத்தெருவுக்கு வந்துவிட்டதால் கொஞ்சகாலம் கத்தி கத்தி ஓயவேண்டியதுதான். ஜெயலலிதா மறைவுக்கு பின் குடும்ப அரசியலை அதிமுகவுக்குள் கொண்டு வந்து நுழைத்தார். மகனை எம்.பி ஆக்கினார். இன்று தடம் தெரியாமல் போய்விட்டார். அதிமுகவிற்குள் குடும்ப அரசியலை கொண்டு வர யார் நினைத்தாலும் அவர்களுக்கும் பன்னீர்செல்வம் கதிதான். அப்பன் மவன் பேரன் கொள்ளுப்பேரன் என்று பதவியை அனுபவிக்க இது திமுக அல்ல. ஜெயக்குமார் போன்றவர்கள் இதை உணரவேண்டும். கங்காரு போல குட்டியை தூக்கிக்கொண்டு தெரியக்கூடாது ஜெயக்குமார் அவர்களே.


முக்கிய வீடியோ