உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும் , அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.திமுக ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.'காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்' என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர்.இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது .இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raghavan
ஜூலை 14, 2025 20:43

இவர்கள் ஆட்சியில் கொள்ளை அடிக்காததுபோல் பேசுவான். நீங்க அடிச்ச கொள்ளைக்குத்தான் அப்போது எதிர்க்கட்ச்சியாக இருந்த திராவிட மாடல் வழக்கு போட்டுஇருக்கிறார்களே. அதை முதலில் எதிர்கொள்ளுங்கள். சொம்பை மறைத்துவை திருடன் வரான் என்பதுபோல் இருக்கிறது இவன் பேச்சு.


தாமரை மலர்கிறது
ஜூலை 14, 2025 20:10

பிஜேபி தலைமையிலான ஆட்சி வந்தால் மட்டுமே மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


Samy Chinnathambi
ஜூலை 14, 2025 17:17

கொள்ளை அடிக்கிறவங்ககிட்டயே சட்டம் போட சொன்னால் எப்படி? ஆட்சி பதவி ஏற்றவுடன் எல்லா பயலும் ஆத்துல வேண்டிய இறக்கு. மண்ணை அள்ளு .எவன் வந்தாலும் தடுத்தாலும் அவன் பதவியில் இருக்க மாட்டேன்னு அணிலு சொன்னது மறந்து போச்சா?


K.SANTHANAM
ஜூலை 14, 2025 17:07

இரண்டு கட்சிகளும் கூட்டாக இன்னும் தமிழகத்துல மணல் கொள்ளையை நடத்தி வருகின்றன. ஜெயலலிதா செந்தில் பாலாஜியை நீக்கியது திமுகவினரினடோடு இருந்த மறைமுக கூட்டணியால் தானே.


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 20:31

ஒரே கன்பூஸா இருக்கு ஏதனுக்கும் கொஞ்ச நாளைக்கு பொறுத்திருப்போம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 14, 2025 15:42

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆற்று படுகைகளில் உள்ள மணலை ஏற்கெனவே அடியோடு வழிச்சாச்சு. இனிமேல் நீங்க சட்டம் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? இப்போது எம். சாண்ட் என்ற போர்வையில் மலைகளை அழிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதை தடுத்து நிறுத்த வழி தேடுங்கள். அசாமில் இருந்து கப்பல் மூலம் பிரம்மபுத்திரா ஆற்று மணல் கொடுப்பதாக அம்மாநில முதல்வர் அறிவித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை நடைமுறைபடுத்த வழி செய்யுங்கள்.


VSMani
ஜூலை 14, 2025 15:38

மணல் கொள்ளை , தாது மணல் கொள்ளை, மலை கொள்ளை எல்லா இயற்கை வளம் கொள்ளைகளை அதிமுக செய்யவில்லையா? திமுக அதிமுக இரண்டுமே க்கோட்டுக் கொள்ளையர்கள்தான். 2026 இல் திமுக அதிமுக இல்லாத ஆட்சிமாற்றம் வந்தால்தான் தமிழ்நாடு உருப்படும். இல்லாவிட்டால் நம் மாநிலத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.


சமீபத்திய செய்தி