உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார்: அண்ணாமலை திட்டவட்டம்

2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார்: அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை: ''2026ல் முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமரப் போகிறார்'' என்று, மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுப்பதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rimxzi3s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாமானிய மனிதர்களில் இருந்து குறிப்பாக டீ கடையிலிருந்து ரோட்டில் எங்கு போனாலும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் இபிஎஸ் இந்த மேடையில் இப்பொழுதுதான் பேசிவிட்டு போய் இருக்கிறார்கள்.2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம், 2026ல் மாற்றம் வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம் அரசு விடிவெள்ளியாக செயல்பட வேண்டும்.ஜி.கே.மூப்பனார் மேலே இருந்து நம்மளை பார்த்து கொண்டு இருப்பார்கள். நிச்சயமாக அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

'சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது இந்திய அளவில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர். தேசிய தலைவராக விளங்கியவர். அவர் எளிமையானவர். அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். கட்சி பேதம் இல்லாமல் யார் அழைத்தாலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ வைக்க கூடிய பண்பாளர். 1996ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி திறம்பட வழி நடத்தினார். இவ்வாறு இபிஎஸ் பேசினார். நிகழ்ச்சியில் வருகை தந்துள்ள தலைவர்களை வரவேற்று பேசிய இபிஎஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சகோதரர் என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Vasan
செப் 06, 2025 05:46

Even in the remote chance of ADMK+DMK winning the elections, Mr.Annamalai will become Chief Minister.


சிட்டுக்குருவி
செப் 05, 2025 04:49

எப்படியும் திராவிடத்திற்கு ஒன்றரை கோடி குடிகாரர்களும் ஒருகோடி பதிவுசெய்த கட்சிக்காரர்களும் உள்ளனர் குடி வேகமாக வளர்ந்ததினால் வாக்குகளும் கூடிவிட்டது .இதையும் மீறி எப்படி வெற்றிபெறுவது என்பதை ஆராய்ந்து தகுந்தவேளை செய்ய முற்படுங்கள் .இந்த மாதிரியான வெத்துப்பேச்சுகள் .வெற்றிபெற உதவாது .கடந்த தேர்தலில் வாக்களிக்காத ஒன்றரை கோடி வாக்காளர்களை கண்டு பிடியுங்கள் .காரணம் அறிந்து நிவர்த்திசெய்யுங்கள் .வாக்கு சதவிகிதம் கூடி னால் தான் உங்களுக்கு வெற்றிவாய்ப்புகள் .


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 31, 2025 11:04

இந்த அறிவு மொதல்லெயே இருந்திருந்தால் மாநில தலைவர் பதவி நாற்காலியில் இருந்து தள்ளி விட்டுருக்க மாட்டார்கள்


VenuKopal, S
ஆக 31, 2025 07:57

எப்படி...? 40 எம்பீ க்கள் வெறும் மேசை தட்டல் , வடை பஜ்ஜி கேண்டீன் ல் தின்று கொழுத்து முக்கிய விவாதங்களில் பேசமுடியுமல் புறமுதுகு இட்டு கடந்த 10 ஆண்டுகளாக இருப்பதை போலவா ..? இன்டிகா கூட்டணி கனவு


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஆக 31, 2025 06:29

ஒரு வடிகட்டின அயோக்கியனை ஒழிப்பதற்காக மற்ற ஒரு அயோக்கியனோடு கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.


Saai Sundharamurthy AVK
ஆக 30, 2025 22:39

திமுகவினர் அதிகமாக புலம்புவது தெரிகிறது......!!!!


Venugopal S
ஆக 30, 2025 20:41

குதிரை குப்புறப் தள்ளிவிட்டதும் இல்லாமல் குழி பறித்த கதையாகப் போகிறது!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 30, 2025 20:32

வாரிசுகளை வெளிநாட்டில் படிக்க வைத்ததாக இங்கே சொல்லிக்கொள்ளும் அடிமைகள் கூட அடித்துக்கொண்டு புலம்புவதைக் காண முடிகிறது ..... என்ன டிசைனோ >>>>


Narayanan Muthu
ஆக 30, 2025 19:49

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கி வச்சிட்டானுங்கய்யா. வடிவேலு ஸ்டைலில் பேசி பாருங்க உங்களுக்கே ஒரு எனர்ஜி உண்டாகும்.


என்னத்த சொல்ல
ஆக 30, 2025 19:45

EPS யை முதல்வர் ஆக்க, அண்ணாமலை போராடுகிறார்...


மனிதன்
ஆக 31, 2025 00:13

என்னத்த சொல்ல?


புதிய வீடியோ