வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்த்துக்கள் ஐயா
அப்படியே சின்னம்மா காலில் விழுந்த போட்டோவையும் போடுங்க. ஒரு சுண்டைக்கா ஈகோ பிரச்னையால் MGR நிறுவிய மாபெரும் கட்சியை முழுவதுமாக சிதைத்த பெருமை எடப்பாடியை சேரும்
சென்னை; ஜிப்லி டிரெண்டிங்கில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இணைந்துள்ளார்.அண்மைக்காலமாக சமூக வலைதள பக்கங்களை எட்டி பார்த்தால் ஒரே மாதிரியான அனிமேஷன் படங்கள் வெளியாகி டிரெண்டிங்கில் அசத்தி வருகிறது. விளையாட்டு, அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரின் அனிமேஷன் படங்கள் அதிகம் பேரால் விரும்பப்பட்டு பின்னர் பகிரப்பட்டும் வருகின்றன.இந்த வகை படங்கள் ஜப்பானின் ஜிப்லி ஸ்டுடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏ.ஐ, சாட் ஜிபிடி பயன்படுத்தி இதுபோன்ற அனிமேஷன் படங்களை பலரும் உருவாக்கி கலக்கி வருகின்றனர்.இந் நிலையில், ஜிப்லியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இ.பி.எஸ்., கூறி இருப்பதாவது; தமிழகத்தின் இதயத்தில் இருந்து ஸ்டுடியோ ஜிப்லி உலகம் வரை எனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வாழ்த்துக்கள் ஐயா
அப்படியே சின்னம்மா காலில் விழுந்த போட்டோவையும் போடுங்க. ஒரு சுண்டைக்கா ஈகோ பிரச்னையால் MGR நிறுவிய மாபெரும் கட்சியை முழுவதுமாக சிதைத்த பெருமை எடப்பாடியை சேரும்