உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இபிஎஸ் சந்திப்பு

டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இபிஎஸ் சந்திப்பு

சென்னை: டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார்.அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் எழுப்பி இருந்தார். இதற்காக அவர் அளித்த காலக்கெடுவும் இன்று முடிகிறது. செங்கோட்டையனின் இந்த செயல்பாட்டை தொடர்ந்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இபிஎஸ் நீக்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yofddu4k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்படியான பரபரப்பான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டில்லிக்கு சென்றுள்ளார். இன்று மாலை அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என்று தெரிகிறது. இபிஎஸ் உடன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டில்லிக்கு சென்றிருக்கின்றனர். டில்லி சென்ற இபிஎஸ்சை, விமான நிலையத்தில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம், தனபால் ஆகியோர் வரவேற்றனர். ஜெயலலிதா மறைந்த பின்னர், ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜவுக்கு நன்றி என்று நேற்றைய தினம் அவர் கூறியிருந்த நிலையில், இன்றைய டில்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

சந்திப்பு

டில்லியில் துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது புதிதாக துணை ஜனாதிபதியாக பதவியேற்று இருப்பதற்கு ராதாகிருஷ்ணனுக்கு இபிஎஸ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 17, 2025 06:51

அமீத்சாவாலே முடீலே. சிபிஆர் கிட்டே கூட்டணிக்கு CPR கொடுக்க அசைன்மெண்ட் கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டார், பாவம் அமீத்சா எவ்வளவு தடவை மண்ணைக் கவ்வுவார்? கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரன், அதான் நம்ம எடியூரப்பா வாரிசு தான் நம்ம பழனிசாமி மகன், சம்பந்தியோட பிசினஸ் கூட்டாளி. ஊழல் கேஸ்லே ரெண்டு பேரும் பின்னிப் பிணைஞ்சி இருக்குறதாலே பழனிசாமியை ஜண்டாவாலே மெரட்ட முடீலே. பழனிசாமி கெத்தா சவால் வுடுறார். அதனாலே புதுசா ஒருத்தரை பஞ்சாயத்துக்கு அனுப்பீருக்காங்க ஜண்டா தரப்பிலேருந்து. திருடனுக்கு தேள் கொட்டின பீலிங்ஸ் தான் ஜண்டா குரூப்புக்கு


Venugopal S
செப் 16, 2025 18:26

அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்தாலும், துணை ஜனாதிபதி அவர்களிடம் போய் சற்று நேரம் தமிழில் புலம்பிய பிறகு மனசிலிருந்த பாரமெல்லாம் இறங்கி விட்டதோ?


Tamilan
செப் 16, 2025 16:06

eps காலையில் எழுந்தவுடன் தன செல்லவிருந்த ஏர்போட்டின் நிலமையைப்பார்த்து பதறிப்போய்விட்டார்


V Venkatachalam
செப் 16, 2025 18:50

இபிஎஸ் பதறி போய்ட்டாரோ இல்லியோ அப்புடி சொல்லி நாம சந்தோஷப்படுவோமே. அதை யாரு கேக்கப்போறா? ஆனா ஒண்ணு நம்ம புத்தி அல்பம்–னு நாம் காமிச்சு கிட்டா நமக்கு அதை விட பெருமை என்னா இருக்கு.


Svs Yaadum oore
செப் 16, 2025 13:27

டெல்லியில் வடக்கன் மத்திய அமைச்சருக்கு மிஸ்ட் கால் கொடுத்து பிசினெஸ் டீலிங் வைத்து ஆயிரம் கோடிகளில் சம்பாதிப்பது விடியல் எம்பிக்கள்.. இவர்களுக்கு எடப்பாடியை குறை சொல்ல யோக்கியதை என்று ஏதாவது இருக்குதா ??.....


திகழ்ஓவியன்
செப் 16, 2025 14:16

ஸ்டாலினிக்கு 22 MP 8 ராஜ்ய சபா MP, இவரு ஒரு டம்மி பீஸ் இவரு எல்லாம் எங்கள் லிஸ்ட் இல் இல்லவே இல்லை, உங்களுக்கு தேவ தூதர் போல தெரியலாம், சாரி NO TIME TO TALK ABOUT EDAPADI


திகழ்ஓவியன்
செப் 16, 2025 14:19

10 நாள் கெடு முடிந்து ஓடும் அடிமை சாசனம் இவர், எங்களுக்கு வேஸ்ட் BEGGAGE எப்படி எடப்பாடிக்கு நீங்கள் வேஸ்ட் BAAGAAGE ஓ அப்படி


என்னத்த சொல்ல
செப் 16, 2025 13:23

NDA தமிழ்நாடு கூட்டணிக்கு EPS தான் தலைவர். இவரும், இவரது கட்சி ஆட்களும் பிஜேபி தலைமையைய போய் ஓடி ஓடி பார்ப்பது வெட்கக்கேடானது. பள்ளி பசங்கள விட கேவலமா இருக்கு..


திகழ்ஓவியன்
செப் 16, 2025 13:05

அப்படியே BACK சைடு கதவு இருந்தா எடுபுடி போயி ஷா வை சந்திசி விட்டு வருவார், இங்கே வீராவேசம் டெல்லி சென்று ஷா சந்திப்பு இல்லை, இதற்க்கு எத்துணை கார் ஏறி ஓடப்போகிறார்


Vasan
செப் 16, 2025 12:57

In the year 2041, there will be ADMK+DMK alliance to retrieve Tamilnadu back to Dravidian parties from BJP.


திகழ்ஓவியன்
செப் 16, 2025 13:02

IF MODI GONE


Karthik Madeshwaran
செப் 16, 2025 12:53

நேத்து எங்களை யாராலும் மிரட்ட முடியாது, எங்களுக்கு தன்மானம் முக்கியம், தகர டப்பா முக்கியம்னு வீரவசனம் பேசிட்டு இருந்தவர் எங்கன்னு காலைல தேடி பார்த்தா டெல்லில இருக்காராம். எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்புன்னு கேக்குறேன்? இவரெல்லாம் ஒரு தலைவரு ? இவருக்கு பின்னாடி நாலு பேரு வேற. என்னாடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.


கல்யாணராமன் மறைமலை நகர்
செப் 16, 2025 12:03

சர்காரியா கமிஷன் விசாரணைக்கு பயந்து இந்திரா காலில் சரணடைந்தது கருணாநிதி. மேலும், கூட்டணிப் பேச்சு ஒருபக்கம். வருமானத்துறை ரெய்டு இன்னொரு பக்கம். அலறி அடித்துக் கொண்டு 63 சீட்டுக்கள் காங்கிரசுக்கு. யார் அது? கருணாநிதி இத்தாலி அடிமையாக இருந்தது தெரியாதா? மகன் மீது வழக்கு வரும் என்ற செய்தி தெரிந்தவுடன் அதுவரை புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்திற்குத் தானே சென்று மோடி கையைப் பிடித்துக் கொண்டு மகனைக் காப்பாற்றினால்தான் ஆச்சு என்று கையை விடாமல் உறுதி கேட்டது யார்? யோசிப்பவர்களுக்குப் புரியும் அடிமை யார் என்று.


raju
செப் 16, 2025 12:36

முன்னாள் ஜனாதிபதி மனைவி ஒரு பர்மா காரர். இன்றைய மந்திரி ஜெய் ஷங்கர் மனைவி ஒரு ஜப்பான் காரர். இந்த பிஜேபிக்கு ராஜிவ் மனைவி மட்டும் வெளிநாட்டு காரர். இன்னும் சொல்லப்போனால் சோனியா ஒரு இந்தியா பெண் ஆகவே மாறிவிட்டார். அனால் ஜெய் ஷங்கர் மனைவி இன்னும் ஜப்பான் பாரம்பரிய உடை அணிகிறார். ஏன் இந்த வேஷம் பிஜேபி ?


duruvasar
செப் 16, 2025 11:57

காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்டுகளை திமுக விழுகியதை போல செய்வார்கள் என எதிர்பாக்குறீரோ ?


சமீபத்திய செய்தி