உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., அழுத்தம் கொடுக்க வேண்டும்: சேகர்பாபு

மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., அழுத்தம் கொடுக்க வேண்டும்: சேகர்பாபு

சென்னை: '' நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு தான் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, தமிழக அரசுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது,'' என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த சேகர்பாபு கூறியதாவது: வெள்ள பாதிப்பிற்கு உதவுவதாக மத்திய அரசு அறிவிப்போடு நிற்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உள்ளார்.மழை வெள்ள காலத்தில், ஆளுங்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், ஆலோசனை சொன்னால் ஏற்றுக் கொள்ள முதல்வர் தயார். ஆனால், குறைகளை சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிகளோடு அவதூறுகளை அள்ளி வீசுகின்றன. அரசியலில் கள ஆய்வு கூட்டங்களை கூட நடத்த முடியாத சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளார். சென்னைக்கும் , சேலத்திற்கு மட்டும் அரசியல் செய்கிறார். அவர், சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதாக கூறுகிறார். சாத்தனூர் அணையில், 1.68 லட்சம் கன அடி நீர் முன்னறிவிப்பு செய்து தான் திறக்கப்பட்டது. இதனால் தான் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பல உயிர்களை அரசு காப்பாற்றி உள்ளது. மனசாட்சி இருந்தால் தமிழக அரசுக்கு பழனிசாமி நன்றி கூறியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு குறை சொல்கிறார். வாய்சவடால் விடும் எதிர்க்கட்சி தலைவர், நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, தமிழக அரசுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Easwar Kamal
டிச 03, 2024 20:18

ஏன் eps குரல் கொடுக்கணும். நீங்கள் எல்லாம் எதுக்கு இருக்கீங்க. உங்களால் முடிய விட்டால் eps முடி சூட்டி விட்டு உங்கள் மாநிலம் ஆந்திராவுக்கு போகலாம். மற்ற அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அவர்அவர் ஊருக்கு கிளம்பி போயிறலாமா?


சம்பா
டிச 03, 2024 20:17

39 பேருக்கு. பஜ்ஜி சாப்பிட ர வேலையா ?


Dharmavaan
டிச 03, 2024 20:10

உன் ஆட்சியை அவரிடம் கொடுத்துவிட்டு ஓடு அவர் நிதி கொண்டு வருவார்


Dharmavaan
டிச 03, 2024 20:09

ஜால்ரா போடுபவன்தான் எதிர் காட்சியாகி இருக்க வேண்டும் அதுவே இந்த பிளாடபார்ம் மந்திரியின் ஆசை


VENKATASUBRAMANIAN
டிச 03, 2024 19:02

ஏன் ரூ. 4,000 கோடியை ஏப்பம் விட்டது போல் வாங்கி ஏப்பம் விடவா


ayen
டிச 03, 2024 18:56

புதுச்சேரியில் நிவாரண நிதி முதல்வர் அறிவித்துவிட்டார். ஒரே நாளில் தண்ணீரும் வடிய நடவடிக்கை துரிதமாக மேற்கொண்டார்.மத்திய அரசிடம் இனி மேல் இழப்பு கணக்கீடு அறிக்கை வந்த பிறகு மத்திய அரசிடம் கொரிக்கை வைப்பார். இன்னும் ஒரு சில பகுதிகளை ரற. தொகுதி வாரியாக அந்த எம்,எல்,ஏ மூலயமாக மக்களுக்கு சாப்பாடு விநியோகம் செய்யப்பட்டது.


vejai
டிச 03, 2024 18:55

39 பேர் பார்லிமென்ட்ல போய் டீ சமோசா சாப்பிட?


B N VISWANATHAN
டிச 03, 2024 18:48

நீங்க தான் அவருக்கு வேற வேலை இல்லை ன்னு சொன்னிங்க. நீங்களே படை எடுக்க வேண்டியது தானே


sankaranarayanan
டிச 03, 2024 18:43

நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு தான் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டுமே என்று அமைச்சர் சேகர் பாபு கூறியது வியப்பாகவே உள்ளது அப்போ இங்கே திராவிட ஆட்சி தமிழகத்தில் இல்லையா பழனிச்சாமி ஆட்சியாக இருந்திருந்தால் அவரே நேரில் சென்று பிரதமரை சந்தித்து நிலவரத்தை விளக்கிக்கூறி தகுந்த நடவடிக்கைகை எப்போதோ எடுத்திருப்பார் எல்லாருக்கும் குறைந்தது ரூபாய் பத்தாயிரமாவது கொடுக்க ஏற்பாடு செய்திருப்பார்


R.MURALIKRISHNAN
டிச 03, 2024 18:27

போன ஆட்சியில் உமது கட்சிகாரர்கள் கூவாத கூவலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை