உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கில் நிறைவு பெற்றது வேட்பு மனு தாக்கல்; ஒரே நாளில் வந்தது 56 மனு

ஈரோடு கிழக்கில் நிறைவு பெற்றது வேட்பு மனு தாக்கல்; ஒரே நாளில் வந்தது 56 மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஜன,17) நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. தேசிய கட்சியான பா.ஜ.,வும் போட்டியில்லை என்று விலகிக் கொண்டுள்ளது. தேர்தல் களத்தில் தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே களத்தில் உள்ளது. தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல, நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் உட்பட மொத்தம் 56 பேருடைய மனுக்கள் கடைசி நாளான இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று (ஜன.17) மதியம் 3 மணியுடன் வேட்பு மனுவுக்கான நேரம் முடிந்து விட்டதால் மனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை (ஜன.18) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ல் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 22:27

28% திமுக வாக்குகள் + 20% கூட்டணி வாக்குகள் சாலிடா திமுக வேட்பாளருக்கு கிடைக்கும். எப்படியும் 65-70% தான் வாக்குப் பதிவு இருக்கும். மீதி 17 - 22% வாக்குகள் யாருக்கு எப்படி விழுந்தால் என்ன. திமுக வேட்பாளருக்கு எதிராக 55 வேட்பாளர்கள். 65-70% வாக்குப் பதிவில் இந்த 55 பேரில், ஆளுக்கு 1% கூட கிடைக்காது போல இருக்கிறதே


தாமரை மலர்கிறது
ஜன 17, 2025 21:47

இடைத்தேர்தலில் ஆளும்கட்சி மக்களுக்கு குச்சிமிட்டாய் கொடுத்து பட்டியில் அடைத்து வெல்லும் என்பது இறுதியாகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் போட்டியிட கூடாது. இதனால், ஆளும் கட்சி மக்களுக்கு பணம் கொடுப்பது குறைந்துவிடும். அதனால் அதிருப்தி ஏற்பட்டு, மக்கள் சுயேட்சைக்கு ஓட்டு போடுவார்கள்.


r ravichandran
ஜன 17, 2025 17:39

இப்போது இருக்கும் முக்கிய இலாகா திமுக அமைச்சர்கள் அனைவரும் ஒரு நேரத்தில் அதிமுக கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அரசியலில் கட்சி மாறுவது, சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே நடைபெற்று வருகிறது.


r ravichandran
ஜன 17, 2025 17:36

கருணாநிதி கூட எம் ஜி ஆர் தயவில் தான் முதல் அமைச்சர் ஆனார். பிறகு அவர் முதுகில் குத்தினார், அதன் பலனை எம் ஜி ஆர் உயிரோடு இருந்த வரை கோட்டையில் முதல் அமைச்சர் அறை பக்கம் வர முடியாமல் தவித்தார்.


Mohan
ஜன 17, 2025 16:49

உங்களிடம் உள்ள குஸுபு நல்லவர். கட்சி maarathavar


ராமகிருஷ்ணன்
ஜன 17, 2025 16:09

திமுக வேட்பாளர் ஒரு நன்றி கெட்ட ஜென்மம். விஜயகாந்தை முதுகில் குத்திவிட்டு வந்தவர் திமுகவால் விலைக்கு வாங்க பட்டவர். திமுக, தேமுதிகவுக்கு இழைத்த துரோகத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு


Mohan
ஜன 17, 2025 16:51

உங்களிடம் உள்ள குஸுபு நல்லவர். முதுகில் குதடவர்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 17:18

பாஜக வில் இருப்பவர்களில் 50% க்கும் மேல எல்லாரும் காங்கிரஸ், சிவசேனா, த்ரணமூல் காங்கிரஸ் மாதிரி கட்சிகளின் முதுகில் குத்திட்டு வந்தவர்கள் தான். அதுவும் சிலர் MLA, MP ஆன பிறகு நின்று ஜெயித்த கட்சி மற்றும் ஓட்டு போட்ட மக்களின் முதுகில் குத்திட்டு வந்தவர்கள் தான். முதுகில் குத்துவதை அரசியலாகவே பண்ணுகிற பாஜக அடிமைகள் பேசலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை