உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வீடு கட்டினாலும் கார் நிறுத்துமிடம் கட்டாயம்; விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை

ஒரு வீடு கட்டினாலும் கார் நிறுத்துமிடம் கட்டாயம்; விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியாக ஒரு வீடு கட்டினாலும், அதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதியை உறுதி செய்யும் வகையில், விதிகளை கடுமையாக்கும் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்ய, கட்டுப்பாடுகள் உள்ளன.இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு 750 சதுர அடிக்கும், ஒரு கார் நிறுத்துமிடம், இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இருக்க வேண்டும். இதற்கு ஏற்றபடி இடத்தை ஒதுக்குவதுடன், அதை வரைபடத்தில் குறிப்பிட்டால் மட்டுமே, திட்ட அனுமதி கிடைக்கும்.இருப்பினும், பெரும்பாலான இடங்களில், 700 சதுர அடி, அதற்கு குறைவான பரப்பளவுள்ள வீடுகளுக்கு, வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால், ஒரு படுக்கை அறை வீடு வாங்குவோர், தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.இது மட்டுமல்லாது, ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் அளவுக்கு தனி வீடு கட்டுவோர் பலரும், நிலம் முழுவதையும் பயன்படுத்தி, கட்டுமானப் பணி மேற்கொள்கின்றனர். இதனால், இவர்கள் வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவது இல்லை.வரைபட அனுமதி நிலையிலும், அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதனால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.இப்பிரச்னைக்கு தீர்வு காண, வீடுகளில் கார் வாகனம் நிறுத்தத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'தனி வீடுகளில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்யும் வகையில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், ஒரு குடும்பம் வசிப்பதற்கான தனி வீடுகளில், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை உறுதி செய்ய, கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளன. மனையின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு, சாலையின் அகலம் அடிப்படையில், இதற்கான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட உள்ளன.குறிப்பிட்ட சில இடங்களில், மனையின் பரப்பளவு குறைவாக இருக்கும் நிலையில், அதில் வீடு கட்டுவோர், வேறு இடத்தில் வாகனத்தை நிறுத்தும் இடத்தை காட்ட வேண்டும். அதே நேரத்தில் தரைதளம் முழுவதையும் வாகன நிறுத்துமிடமாக விடுவோர், அந்த இடத்தை வெளியாட்கள் வாகனம் நிறுத்த வாடகைக்கு விடலாம் என்பது போன்ற விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ethiraj
ஜூலை 23, 2025 19:37

How many car park govt constructed in the last 4 years. Memorials ,statue,library,mall ,residential flats govt are ready to allot space not for park.


BALARAM JANARTHANAN
ஜூலை 22, 2025 22:48

தெருக்கள் போக்குவரத்துக்கு ஏற்றவை...சாலைகளிலும் தெருக்களிலும் எந்த வாகனத்தையும் நிறுத்தக் கூடாது என்று அரசாங்கம் ஒரு விதியை உருவாக்க வேண்டும்.


A.Gomathinayagam
ஜூலை 22, 2025 15:45

அடுக்கு மாடி குடியுருப்புகலு க்கும் ஒரு பிளாட் க்கு கட்டாயம் ஒரே கார் நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும்


Rengaraj
ஜூலை 22, 2025 13:56

கார் வாங்கும்போதும் அதை ரெஜிஸ்டரேஷன் செய்யும்போதும் பார்க்கிங் சம்பந்தமான விவரங்களை கட்டாயம் காண்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவேண்டும். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருந்தால் அந்த கார்களை எங்கு நிறுத்துவார்கள் என்ற விவரத்தையும் RTO அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவேண்டும். அவர்களும் அதை உறுதிப்படுத்தியபின்னரே RC வழங்கவேண்டும்.


Sivagiri
ஜூலை 22, 2025 13:17

இதெல்லாம் நடக்காத காரியம், கார் வைத்திருக்க வேறு பல கண்டிஷன்கள் போட்டால்தான் வாகன நெருக்கடிகள் - ட்ராபிக் ஜாம் - ஏர் பொல்லுசன் - நாய்ஸ் போலுசன், கட்டுக்குள் வரும் - - மாதம் குறைந்தது பத்தாயிரம் கி.மீ யாவது ஓட்டும் பயன்பாடு இல்லாதவர்கள், மேலும் மூன்று நாட்களுக்கு மேல் கார்களை சும்மா நிறுத்தி வைத்திருப்பவர்கள் - காரை விற்று விட வேண்டும், அதோடு, எந்த கார்களிலும் குறைந்தது மூன்று பேர் செல்ல வேண்டும், சிங்கிளாகவோ டபுளாகவோ செல்ல வேண்டும் என்றால், டூவீலரை பயன்படுத்த வேண்டும், அல்லது ஷேர் ஆட்டோ, ஷேர்டாக்ஸி, அல்லது பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சென்று கொள்ளவேண்டும், ஆயிரத்து இருநூறு சிசி-க்கு குறைவான சிறிய ரக, பெட்ரோல் டீசல் வாகனங்களை தடை செய்து, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் அதுவும் அதிக தேவை இருப்பவர்கள் மட்டுமே வாங்க அனுமதிக்க வேண்டும்...


aaruthirumalai
ஜூலை 22, 2025 11:41

பட்டுக்கோட்டையில் பெரிய அளவிலான பிரச்சினையாக இருக்கு. குறுகிய சாலையில் நிறுத்தி வைத்தால் என்ன செய்வது.


Padmasridharan
ஜூலை 22, 2025 11:12

நடக்கறவனுக்கும் மிதி வண்டி ஓட்டறவனுக்கும் மதிப்பில்லாம போச்சுது. நடைபாதைகளில் கூட வண்டிகள்தான் சிங்கார சென்னையில். இதில வேற காவலர்கள் flats இல் barricade கொடுத்து வண்டிகளை கட்டுப்படுத்தியும், no parking போர்ட்ஸ் வைக்கின்றனர்.


Venkatesan
ஜூலை 22, 2025 10:34

வெள்ள நீர் வடிகால் கால்வாய்கள் காட்டுறோம்னு எல்லா ரோடயும் கோவணம் மாதிரி சின்னதா ஆகிப்புட்டானுங்க இந்த கால்வாய்கள் மேல இப்போ முழுதும் பார்க்கிங் தான். இதனால் சாலைகளில் தேவை இல்லாத நெரிசல் வேற... மூளையை மண்டைல வச்சிருக்கானுங்களா இல்ல... வச்சிருக்கானுங்களான்னு தெரியல...


R.Subramanian
ஜூலை 22, 2025 10:27

பார்க்கிங் வசதி இல்லாத வீடுகளுக்கு வாகனம் விற்க கூடாது. சொந்த வீடு இல்லாதவர்கள் வாகனம் வாங்குவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.


Kanns
ஜூலை 22, 2025 10:23

Good Idea But Practically Impossible. Why OverFattened Govt Officials & RulingParties Brains Not Worked Earlier. Recover All Salarirs/Assets from them for Huge Remedial Costs demolitions& ReConstructions


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை