உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., சிலைகளுக்கு பாதுகாப்பு ரோந்து போலீசாருக்கு உத்தரவு

ஈ.வெ.ரா., சிலைகளுக்கு பாதுகாப்பு ரோந்து போலீசாருக்கு உத்தரவு

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப காலமாக, ஈ.வெ.ரா.,வை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டம் ஒன்றில், 'என் மீது வெங்காயம் வீசினால், நான் வெடிகுண்டுகளை வீசுவேன்' என, சீமான் ஆவேசமாகப் பேசினார். அவருக்கு, 'வெங்காயத்தோடு வருகிறேன்; வெடிகுண்டுகளை வீசிப்பார்' என, வி.சி., நிர்வாகி வன்னியரசு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, ஈ.வெ.ரா., சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, அவர்கள் பொறுப்பில் உள்ள, காவல் நிலைய எல்லைகளில், ஈ.வெ.ரா., சிலைகள் இருந்தால், அவற்றுக்கு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை