உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஈவெரா சிலை: அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஈவெரா சிலை: அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை மாவட்டம் எழுமலை ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் முன்பகுதில் அதற்கு சொந்தமான நிலம் உள்ளது. அறநிலையத்துறையின் அனுமதியின்றி ஈவெரா சிலை நிறுவப்பட்டது. இது பக்தர்களின் மத உணர்வை அவமதிக்கும் வகையில் உள்ளது. சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஈவெரா சிலை, கம்யூனிஸ்ட் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அறநிலையத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தஞ்சாவூர் மாவட்ட தி.க.,தலைவர் அமர்சிங் தன்னையும் இவ்வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து கருத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு செய்தார்.ஏற்கனவே விசாரணையின்போது கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: கண்டியூரில் 'சர்க்கார் புறம்போக்கு' என வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் சிலை அமைந்துள்ளது. கிராம கணக்குகளான 'அ' பதிவேடு மற்றும் அடங்கல் குறிப்புரை பகுதியில் 'கோயில்' எனவும் ‛பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில்' என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிலை 1990 ல் சாலையோரத்தில் நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கப் பணியின்போது சிலை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் அமைக்கப்பட்டது. கண்டியூர் ஊராட்சி வெள்ளாளர் தெரு கிளை நுாலகம் அருகில் சிலையை இடமாற்றம் செய்ய திகவை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அது ஊராட்சிக்கு சொந்தமான பொது இடம்.பொது இடத்திற்கு மாற்ற முடியாதுஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி சிலைகள், கொடிக்கம்பங்கள், நினைவுச் சின்னங்களை எந்த ஒரு பொது இடத்திலும் இடமாற்றம் செய்து நிறுவ முடியாது. கோயிலுக்கு வெளியே அச்சிலையை நிறுவ மாற்று இடம் இல்லை. தி.க.,வினர் அச்சிலையை அவர்கள் விரும்பும் தனியார் நிலத்திற்கு இடமாற்றம் செய்ய முன்வர சம்மதம் தெரிவிக்கவில்லை.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தனர். தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், அனுமதியின்றி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, என அறிக்கை தாக்கல் செய்தார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதன் நிர்வாகம் மற்றும் கலெக்டரின் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை 4 வாரங்களில் பாதுகாப்பாக அகற்றி மாற்று இடத்தில் நிறுவ கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

என்றும் இந்தியன்
அக் 31, 2026 19:09

உயிரோடு இருக்கும் போது இந்துதத்துவத்தை கோவிலை இழிவு படுத்தியவன் சிலை கோவில் முன்னே இருப்பது சரியல்ல ஆகவே எல்லா சொரியான் சிலைகளையும் மசூதி வளாகத்தில் சர்ச் வளாகத்திற்கு உடனே மாற்றவும்


Saai sundaramurthy. A.V.K
அக் 31, 2026 13:52

அப்படியே, கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள ஊழல் மன்னன் கருணாநிதி சிலையையும் அகற்ற வேண்டும்.


Jaya Ram
அக் 31, 2026 10:54

கோவிலுக்கு முன்னர் ஆன்மீகத்திற்கு எதிரான எந்த செயல்களும் நடைபெறக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்


ஆரூர் ரங்
அக் 31, 2026 10:16

கொள்கைகளில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள், தள்ளாட்டம்


visu
அக் 31, 2026 09:14

நிலம் கோவிலிக்கு சொந்தம் தெரிகிறது சிலையை வைத்தவர்கேலே அகற்றி தங்கள் வீட்டில் வைத்து கொள்ளட்டும் பொது இடங்களில் எதேர்க்கு அரசுக்கு சம்பந்தமில்லாத ஆளுக்கு சிலை


Kasimani Baskaran
அக் 31, 2026 07:27

பெரியார் சிலை மட்டுமல்ல கோவிலுக்கு முன்னால் திறந்தவெளி கக்கூஸ் கூட கொண்டு வருவார்கள். எங்கள் ஊருக்கு பக்கத்தில் புலம் பெயர்ந்தவர்கள் நிர்வகிக்கும் பெரும்படை அய்யனார் கோவில் ஒன்று உண்டு. பக்கத்தில் இருக்கும் சர்ச் கிராதகர்கள் கோவில் கதவுகளை உடைத்து பெரும்பாலும் கக்கூஸாகவே பயன்படுத்தி வந்தார்கள். வருடம் தோறும் அங்கு திரும்ப வரும் புலம் பெயர்ந்தவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நினலயிலேயே இருக்கிறார்கள். இது போல மன நலம் பாதிக்கப்பட்ட திராவிட மத வெறுப்பாளர்களால் இந்துக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் வன்மம் பிடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வாழ்நாள் முழுவதும் மறவாத அளவில் தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.


Elango
அக் 31, 2026 06:45

The ownership of the land at Srirangam where the statue of EVR has been erected with foul language hurting the feeling of god fearing people of Tamilnadu should be looked into and immediate removal of the statue.


M Ramachandran
அக் 31, 2026 03:14

அசிங்க்கம் பிடித்தவன்ங்கள் மூஞ்சியாய் ஆசையுடன் நிறுவிய தரித்திரங்களின் சிலையை நிறுவியவர் சமாதிமேல் அந்த சிலையயை குப்புற படுக்க போட வேண்டும்.நிறுவியவர் குடும்ப பிராணிகளை நாட்டை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும்.


ராஜா
அக் 31, 2026 02:18

சாமி கசக்கிறது கோவில் நிலம் மட்டும் இனிக்கிறது ஒரு மானம் கெட்ட கூட்டத்துக்கு.


Krishna
அக் 30, 2026 22:48

It Must have been Removed by Blasting