செங்கோட்டையன் ஆற்றிய கட்சிப்பணி அளப்பரியது; ஓபிஎஸ்
தேனி: அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியுள்ளார். அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையன் இன்று கோபியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்த நிலையில், அவர் குறித்து தேனியில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் எம்ஜிஆரால் கட்சி தொடங்கிய போதில் இருந்து, இந்தக் கட்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். தொடர்ந்து, 23 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராகவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் இருந்து அனைத்து மக்களையும் அரவணைக்கும் தன்மையுடன், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி உண்மையிலேயே அளப்பரியது, எனக் கூறினார்.