மேலும் செய்திகள்
மஹா., அமைச்சரவையில் பட்னவிசுக்கு உள்துறை
22-Dec-2024
சென்னை; 'பொங்கலன்று நடக்க இருந்த யு.ஜி.சி., நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: யு.ஜி.சி., நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. தமிழ்ப் பண்பாட்டு திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடக்கும் என, மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்கு பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.இனியாவது, நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நம் நாட்டின் பன்முகத்தன்மையையும், இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பர் என, நம்புவோம்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
22-Dec-2024