உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு

விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே திருத்த வேண்டும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 28ல் துவங்கியது; வரும் 15ல் முடிகிறது. வரும் 21 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. கடந்த கல்வி ஆண்டில் இத்தேர்வு நடத்தப்பட்டபோது, பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால், தமிழ் வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்கள் திருத்தியதாக புகார் எழுந்தது.இந்தாண்டு இந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே திருத்த வேண்டும் என, தேர்வு துறை அறிவித்துஉள்ளது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை