உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பாலம் ரூ.600 கோடியில் நீட்டிப்பு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை பாலம் ரூ.600 கோடியில் நீட்டிப்பு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், நீலம்பூர் வரை 600 கோடி ரூபாயில் நீட்டிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.கோவையில் கருணாநிதி நினைவு நுாலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். மாவட்ட வாரியாக ஆய்வை, முதலில் நான் கோவையில் தான் மேற்கொண்டு உள்ளேன். செந்தில் பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை முடக்க தடைகளை ஏற்படுத்தினார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n7zelqff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து இருக்கிறார். தடைகளை உடைத்து மீண்டு வந்த செந்தில் பாலாஜி கோவை வளர்ச்சிக்கு பாடுபடுகிறார். கோவையின் அடையாளமாக செம்மொழிப் பூங்கா மாறும். கோவையில் மாபெரும் நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும். நூலகம் கம்பீரமாக அமையும். தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தால், அதை குறிப்பிட்ட காலத்தில் திறந்து வைப்போம். இந்தியாவிலே முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் தான் தொடங்கப்பட்டது.* கோவையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை விற்பனைக்கான தொழில் வளாகம் கட்டப்படும். தங்க நகை தயாரிப்பாளர்களிடம் கோரிக்கைகளை கேட்ட பின் அறிவிப்பை வெளியிடுகிறேன். நகை தொழில் வளாகம் அமைப்பதன் மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.* கோவையின் உட்கட்டமைப்பு வதிகளை மேம்படுத்த 475 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உக்கடம் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.* மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 250 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு 40 சதவீதம் பணிகள் முடிவடைந்திருக்கிறது.* பாதாளச் சாக்கடை வசதி இல்லாத பகுதிகளிலும், 1,832 கோடி ரூபாய் செலவில் 1,197 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. * பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.* கோவையில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம் கட்டப்படும்.* கோவை கிரிக்கெட் மைதானம் கட்ட விரைவில் பணிகள் துவங்கப்படும்.* ரூ.1,848 கோடியில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* கோவையில் விளை நிலங்களை ஒட்டிய இடங்களில் யானை போகாத நவீன வேலிகள் அமைக்கப்படும்.* கோவை அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், நீலம்பூர் வரை 600 கோடி ரூபாயில் நீட்டிக்கப்படும்.

திராவிட மாடல்

ஒவ்வொரு தனிமனிதரின் கவலையை போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களின் வாழ்க்கையோடு திராவிட மாடல் அரசு திட்டங்கள் கலந்து இருக்கிறது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனம் இல்லாதவர்கள் என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு இருக்கிறோம். இதனால் தான் மக்கள் தொடர்ந்து தி.மு.க.,வை ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள்.

செல்வாக்கு

சட்டசபை தேர்தலை விட, நடந்து முடிந்து லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகம் ஆகி இருக்கிறது. இதுதான் பலரும் விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், மக்களுக்கான எங்களது பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம். இன்று பார்க்கும் நவீன தமிழகத்ததை உருவாக்கியது தி.மு.க., ஆட்சி. வடமாநிலத்தோடு தமிழகத்தை ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே அது புரியும். தமிழகம் இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலம். இந்தியாவிலே அதிக நகரமயமான மாநிலம். இந்தியாவின் மிக சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் 20 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கிறது.

களத்தில் இருந்து பணி

கொள்கையும், லட்சியமும் கொண்டு, அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வை கொண்டு, மக்களுக்கான அரசு நடத்தி கொண்டு இருக்கிறோம். கோட்டையில் அமர்ந்து ஆட்சி நடத்தக்கூடியவராக இல்லாமல், களத்தில் இருந்து பணியாற்ற நான் நினைக்கிறேன். மக்கள் கொடுக்கும் உற்சாகமும், ஆதரவும் தான் எங்களை வேகமாக வேலை செய்ய வைக்கும். உங்களுக்காக உங்களில் ஒருவனாக என்று நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sivagiri
நவ 06, 2024 18:01

வேகமான செயல்பாடுகள் . . . ? . . அதாவது செந்தில் பாலாஜி , ஒண்ணரை வருஷமா செலவழிச்ச பணத்தை இப்போ, எடுத்துக்கோ-ன்னு சொல்றாங்களோ ? . .


ஆரூர் ரங்
நவ 06, 2024 16:26

600 கோடில இதுவரை 95 சதவீதம் முடிஞ்சிருக்கும் . பிரியா


Gopalan
நவ 06, 2024 16:19

instead of wasting several crore in building a park utilise the funds to repair and relay several roads which have not been looked after for the past ten years. instead of second international airport for Chennai at Parandur try to build a green field international airport in the outskirts of Coimbatore.


Murugesan
நவ 06, 2024 16:12

கேவலமான கேடுகெட்ட திமுகக்காரன் குடும்பமே அயோக்கியர்கள் ஊழல் பணத்தில வாழுகின்ற கேடுகெட்ட பிறவிகள் சைத்தான்கள்


Madras Madra
நவ 06, 2024 14:56

கோவையில் திமுக வளர உதவியது அதிமுக


சிந்தனை
நவ 06, 2024 14:25

ஆமாம் பாலம் கட்ட 200 கோடி ரூபாய் தேவை... 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கினால் நல்லபடியாக பாலம் கட்டலாம்.... நம்ம வீட்டையும் கட்டலாம்....


KavikumarRam
நவ 06, 2024 14:22

அறுநூறு கோடியா??? ஆறு கோடிக்கு கூட வேலை நடக்காது. மீதி எல்லாம் விடிஞ்சு மடிஞ்சிரும்.


Badri Narayanan
நவ 06, 2024 12:56

இதுதான் தில்லுமுல்லு மாடல்


Ramesh
நவ 06, 2024 13:49

நல்லா கதறு


Duruvesan
நவ 06, 2024 12:36

பாஸ் யார் என்ன சொன்னாலும் தீயமுக ஜெயிக்கும், எதிர்ல எல்லா தனி தனியா நிக்கறானுவோ


Veluvenkatesh
நவ 06, 2024 12:34

அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த? செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து இருக்கிறாரா? தடைகளை உடைத்து மீண்டு? வந்த செந்தில் பாலாஜி கோவை வளர்ச்சிக்கு பாடுபடுகிறாரா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா கொமாரு? மக்களின் மறதிதான் எங்கள முதலீடு-திரவிடிய மாடல் விளம்பரங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை