பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்
சென்னை: தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் மக்கள், அதற்கான கிரைய பத்திரங்களை, முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். முகூர்த்த நாளான இன்று, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் வைத்து வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று 150 டோக்கன்கள் வழங்கவும், 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் 300 டோக்கன்கள் வழங்கவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.