உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சட்டசபை மற்றும் மேல்சபை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், சபையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி, மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டசபை செயலகத்தில் நடந்து வருகிறது.முதல் கட்டமாக, 1952 முதல் 2024ம் ஆண்டு வரை, சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட tnlasdigital.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தியாகராஜன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா ராமச்சந்திரன், சட்டசபை செயலர் சீனிவாசன் பங்கேற்றனர். இது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபையில் கூறியதாவது:கடந்த 2021 ஆகஸ்ட் 21ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக, 1952 முதல் 2024 வரை சட்டசபை, மேல்சபை நிகழ்வுகளின் பதிவுகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1921 முதல் 1952 வரையிலான சட்டசபை நிகழ்வுகளை கணினிமயமாக்குவதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஏப் 26, 2025 20:49

பனியன் கிழிப்பு போட்டோவெல்லாம் இருக்குமா?


தமிழ்வேள்
ஏப் 26, 2025 11:20

அப்பா, இந்த பாவாடை நாடா , காட்டெருமை , கட்டைபீடி மகாதமியங்களை எல்லாம் இன்னும் பத்து தெரிந்துகொள்ளுமா தெரிந்துகொள்ளும் ?? விளங்கிடும் போ


GoK
ஏப் 26, 2025 10:45

திராவிட மாடல் செயல்களையும் போடுங்கள். சாராயம், பிரியாணி, பிச்சைக் காசு..இவற்றுக்குத் தங்கள் வாக்கை விற்கும் தமிழனத்துக்குத் தெரியட்டும் எப்படி சோரம் போகிறது என்று.


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 10:01

துச்சாதனன் தொரையின் கேவல அசிங்கம் தெரியும். கட்டுமரம் சொன்ன திராவிட நாடு பேச்சு தெரியும். திறனற்ற திமுகவின் மானம் தான் போகும்.


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 09:34

திராவிட நாட்டு நாடா வசனங்களை எல்லோருக்கும் புரியவைக்கும். கடமை, கன்னி யம், கெட்டுப்பாடு விளங்கும். எல்லாம் நல்லதற்கே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 09:02

எதுக்கு ?? சசபையில் புடவையை இழுத்தவனெல்லாம் உயர்பதவியில் இருக்கிறதை எல்லோரும் தெரிஞ்சுக்கவா ??


ManiK
ஏப் 26, 2025 08:54

உண்மையை திரித்து வெளியிடும் திருட்டுதனம். திமுக எங்களுடைய வரலாற்றை எழுதக்கூடாது.


V K
ஏப் 26, 2025 07:56

அப்போ துரை முருகன் செய்த அட்டகாசம் திருவாளர் கருணாநிதி சத்திய வாணி முத்து இடையே நடந்த விவாதம் எல்லாம் இருக்கும் என்று நம்புகிறேன்


கோமாளி
ஏப் 26, 2025 05:47

முதலில் இந்த அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடியோவை ஒளிபரப்புங்கள். பிறகு 1952 எல்லஆம் பார்க்கலாம்


Balasubramanian
ஏப் 26, 2025 05:23

அந்தக் கண்றாவி எல்லாம் எதற்கு? ஜெயலலிதா விற்கு என்ன நடந்தது என்று பார்க்க போனால் சர்வர் டவுன் ஆகிவிடும்!


முக்கிய வீடியோ