உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்திக்கு செல்ல போலி விமான டிக்கெட்: 106 பேரிடம் மோசடி

அயோத்திக்கு செல்ல போலி விமான டிக்கெட்: 106 பேரிடம் மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் இருந்து அயோத்தி அழைத்து செல்வதாக கூறி 106 பேரிடம் போலி விமான டிக்கெட் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் இருக்கின்றது. ஆனால், மதுரையில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக ஒரு சிலர் மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். விமான டிக்கெட் கட்டணமாக அவர்கள் வசூலித்த பணத்தில் அவர்களிடம் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விமான டிக்கெட்டுடன் 106 பேர் மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் வைத்திருந்தது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது.அயோத்திக்கு செல்ல முன்பதிவு செய்யப்படவில்லை என 106 பேரிடமும் இண்டிகோ நிர்வாகம் கூறியுள்ளது. 106 பேரிடம் பணம் வசூல் செய்து போலி விமான டிக்கெட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

D.Ambujavalli
ஜூலை 12, 2024 16:31

இது பக்தியை வைத்து செய்த 'சதுரங்க வேட்டை' போலிருக்கிறது 106 பேரில் ஒருவருக்கு கூடவா ஏர்லைன்ஸை தொடர்பு கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை ?


venugopal s
ஜூலை 12, 2024 15:39

கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் சாதாரண மக்களை ஏமாற்றுவது கை வந்த கலை ஆயிற்றே!


G Mahalingam
ஜூலை 12, 2024 13:00

கடவுள் பக்தி இல்லாமல் ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் குடமுழுக்கு நிறைய கோவில்களில் நடைபெறும் காரணம் கொள்ளை அடிக்க தான். உபயதாரர் செய்வார்கள். அறநிலையத்துறை கணக்கு எழுதுவார்கள்


ديفيد رافائيل
ஜூலை 12, 2024 12:34

உள்ளூர் விமான பயணத்துக்கு விமான நிலையத்துக்கு போனாலே சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் நேரடியாக விமான ticket முன் பதிவு செய்து கொள்ளலாமே. மக்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:56

பாத்ரூமில் கூட இடமில்லையா? கட்டுமர ஆவி


கனோஜ் ஆங்ரே
ஜூலை 12, 2024 11:52

அயோத்தி..ங்ற பேரைச் சொன்னாலேயே.... அயோக்கியத்தனம் பண்ணச் சொல்லும் போலிருக்கே...?


naranam
ஜூலை 12, 2024 12:33

ஆமாண், ஒன்ன மாதிரி புத்தி கெட்டவர்கள் தான் இதைச் செய்கிறார்கள்


Pandi Muni
ஜூலை 12, 2024 12:39

இந்துக்களின் இளிச்சவாய்த்தனத்தால் அந்நிய மத கூலிகள் கொட்டமடிக்கிறார்கள்


Velan Iyengaar
ஜூலை 12, 2024 11:51

அயோத்தி ராமரை காட்டி ஒரு கட்சியே ஏமாற்ற பார்த்தது ... ஏமாற்றுது ......சாதாரண குடிமக்களும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள் ....


வாய்மையே வெல்லும்
ஜூலை 12, 2024 16:53

போதும் உன்னோட பொய்யாதுரை வேஷத்தை கலைச்சிட்டு பாய் பெயரில் பதிவு போட்டு. எப்பவும் பொய் எதிலும் பொய். இது முழுநேர வேலை பாய்க்கு


Rama
ஜூலை 13, 2024 00:49

நீர் முதலில் உண்மைப் பெயருடன் கம்மெண்ட் போடவும். போலிப் பெயரில் ஏமாற்ற வேண்டாம்


சண்முகம்
ஜூலை 12, 2024 11:47

அந்த 100 பேரும் கண்ணிமூடி நடுவீட்டில் உக்காருங்க. தியானமாய் ஸ்ரீராமரை நினத்து, மனக்கண்ணில் ராமர் திணுவார். வணங்குங்கள். அயோத்யராமா கோவிந்தா..ந்னு மூணுமுறை சொல்லுங்க. அயோத்யா போய்விட்டு வந்த பலன் கிட்டும்.


Raghavan
ஜூலை 12, 2024 11:39

அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. இதுகூட ஏதேனும் ஒரு உடன் பிறப்பு ஐடியா வாக இருக்கும். பெரும்பாலும் ஏமாந்தது ப்ராமண சமூகத்தவராக இருக்க வாய்ப்பு உள்ளது.


Lion Drsekar
ஜூலை 12, 2024 11:29

எவ்வழியோ அவ்வழியில் மக்கள் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை