உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடகாடு சம்பவத்தில் தவறான தகவல்; திருமாவளவன் மீது போலீசில் புகார்

வடகாடு சம்பவத்தில் தவறான தகவல்; திருமாவளவன் மீது போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : வடகாடு சம்பவம் தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து, இரு சமூக மக்களிடையே பிரிவினையை துாண்டிவிடுவதாக கூறி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, வடகாடில் வழக்கமாக தேர்வடம் தொட்டுக்கொடுக்கும் சேர்வைகாரன்பட்டிகாரர்கள் அளித்த புகார் மனு:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு சம்பவம் தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி கொடுத்த போது, வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவில், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வடம் தொட்டு கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டத்தில் வழக்கம் போல, வடம் தொட்டு கொடுக்க சென்ற அவர்களை தாக்கி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை தீயிட்டு கொளுத்தி, பலரை காயப்படுத்தி, பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.தொடர்ந்து, வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், 300 ஆண்டுகளாக தேரோட்டத்தில் சேர்வைகாரன்பட்டி சேர்வை வகையறாக்களை சேர்ந்தவர்களே தேர்வடம் தொட்டு கொடுத்து வருகிறோம். அதேபோலவே, இந்த ஆண்டும் தேரோட்டத்தில் நடந்தது. ஆனால், வி.சி., தலைவர் திருமாவளவன், ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களில் பேட்டியாகவும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.இது, எங்களின் பாரம்பரிய உரிமைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவலால், இருதரப்பு மோதலை துாண்டிவிடுவது போலவும் உள்ளது. தவறான தகவலை பரப்பி அவதுாறு செய்துள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'வடகாடு கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதல் விவகாரம் தொடர்பாக, வெளியிட்ட அறிக்கை தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்' என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

M S RAGHUNATHAN
மே 12, 2025 15:11

திருமாவளவன் வக்ஃப் திருத்த சட்டம் இஸ்லாமியர் சொத்துகளை குறிவைத்து இயற்றப் பட்டுள்ளது. அதை ஏற்கமுடியாது என்கிறார். ஆனால் பட்டியல் இனத்தவருக்கு உரிய பஞ்சமி நிலங்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஒரு போராட்டமும் செய்யவில்லை. அவர் இனத்தவருக்கு நல்லது செய்ய மனம் இல்லை இவருக்கு.


Sivak
மே 12, 2025 14:01

சண்டை வேண்டாம்னு நல்லவன் மாதிரி நடிக்கிறது ...


Anand
மே 12, 2025 13:32

ஆரம்பத்தில் வளர்த்து விட்ட திராவிஷங்களை என்ன செய்யலாம்?


Naga Subramanian
மே 12, 2025 12:36

இந்த ஆள் போகும் இடமெல்லாம், எப்பப்பாரு சண்டையும் சச்சரவும்தான்.


V.Mohan
மே 12, 2025 11:14

டாக்டர். அம்பேத்கர் பட்டியலின மக்களை படித்து பட்டம் பெற்று சமூகத்தில் அறிவுத்தகுதி மிக்கவர்களாக ஆகும் பொழுது தீண்டாமை, மற்றும் சாதிய அடக்குமுறைகள் தானாக மறைந்துவிடும் என்றார். அவரது பேச்சை எவ்வளவு பேர் மதித்தார்கள்? அம்பேத்கர் இந்து மத சாதிய அடக்குமுறையை எதிர்த்து அதனை சரி செய்ய வேண்டுமே ஒழிய, வாணலியில் இருந்து நெருப்பில் குதிப்பது போல இந்து மதத்தை விட்டு முஸ்லீம்களின் மதத்திற்கு மாறாதீர்கள். முஸ்லீம்கள் தங்களது மத சட்டத்தை தவிர எந்த சட்ட நடைமுறைக்கும் பணியவோ மதிக்கவோ மாட்டார்கள், முஸ்லிம் தவிர வேறு எந்ந மதத்தை சேர்ந்தவரையும் தலைவனாக ஏற்கவே மாட்டார்கள். இப்படி கூறிய அம்பேத்கருக்கு தெரியாது, அவர் பெயரை பயன்படுத்துபவர்கள் அவரது எந்த அறிவுறுத்தலையும் பின் பற்ற மாட்டார்கள் என்ற உண்மை தான் அது. மத அடக்குமுறைகளை எதிர்த்து அகிம்சை முறையில் வெல்ல முயற்சி செய்ய முடிவெடுத்தால் பட்டியலினம் வலிமை பெறும்.


angbu ganesh
மே 12, 2025 10:26

இவர் ஒரு அழுக்கு மூட்ட புளுகு மூட்ட பதவி பணத்துக்காக என்ன வென செய்வார் கோவமே இந்த சிதம்பரம் மக்களை நினைத்தலதான் இவருக்கு வோட்டு போடறானுங்க


Jayamkondan
மே 12, 2025 10:20

ஏன் உனக்கு இந்த வேலை.. நீ வாங்குற 2 -3 சீட்டுக்கு இது தேவையா... உன்னையே 2 அடி தள்ளித்தான் முதல்வரே வச்சிருக்கார். பேசாம கட்சியை கலைச்சிட்டு பாகிஸ்தான் or ஸ்ரீலங்கா போன்ற நாட்டுல போயி செட்டில் ஆயிடுங்க


kumarkv
மே 12, 2025 10:03

இவனை பிடித்து உள்ளே போடுங்க.


GMM
மே 12, 2025 09:55

நியமன முறைக்கு ஆவணங்கள் குறைவு. திராவிடர் பரவலில் சாதி, சமூக வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல், மத மாற்றம் கருத்தில் கொண்டு சாதி மோதல்கள் அதிகரிக்கின்றன.


Venkateswaran Rajaram
மே 12, 2025 09:43

பிளாஸ்டிக் ஷேர்


புதிய வீடியோ