மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
ராமநாதபுரம் : கச்சத்தீவில் பிப்.23,24 தேதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கு விசைப்படகுகளில் கட்டணம் வசூலித்து பயணிகளை அழைத்து செல்வதற்கு தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்., 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த திருவிழா சம்பந்தமாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நான்கு ஆண்டுகளாக முறையாக அமல்படுத்தவில்லை.உயர்நீதிமன்ற உத்தரவில், பாரம்பரிய மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகில் குடும்பங்கள், உறவினர்களை அழைத்துச்செல்ல தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கச்சத்தீவு விழாவிற்கு வரும் பயணிகளிடம் மீன்பிடி விசைப்படகுகளில் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். கப்பல்களில் அழைத்துச்செல்ல வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. இதனை இந்தாண்டாவது மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சின்னதம்பி, பாரம்பரிய மீனவர் சங்கத்தலைவர் ராயப்பன், கெம்பீஸ், ஜெரோமியோஸ், ஜான் பிரிட்டோ, காளிதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர். இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.-----------
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39