உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி வீட்டில் புகுந்து 50 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் புகுந்து 50 பவுன் நகை திருட்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாரதியார் நகர் பகுதியில் விவசாயி வீட்டில், 50 பவுன் நகையை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 53, விவசாயி. இவர், தனது குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூரில் உள்ள அவரது தோட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்று தங்கினார்.மறுநாள் மதியம் வீட்டின் பராமரிப்பு பணியை பார்வையிட வந்த போது, வீட்டின் முன் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததோடு, பீரோவில் இருந்த, 50 பவுன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து, அவர் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ