உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான நிலையங்களில் குடியுரிமை முத்திரைக்கு இனி காத்திருக்க வேண்டாம்

விமான நிலையங்களில் குடியுரிமை முத்திரைக்கு இனி காத்திருக்க வேண்டாம்

சென்னை: விமான நிலையங்களில், இந்திய பயணியர் குடியுரிமை சோதனைப் பிரிவில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தடுக்க, புதிதாக எப்.டி.ஐ.டி.டி.பி., எனப்படும், விரைவான குடியுரிமை பரிசோதனை சேவையை, சென்னை, மும்பை, பெங்களூரு உட்பட ஏழு விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

பரிசோதனை

உள்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும்இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பும் இந்தியர்கள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற வேண்டியது அவசியம்.பயணியர் எண்ணிக்கை காரணமாக முத்திரை பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எளிதாக்க, எப்.டி.ஐ.டி.டி.பி., எனப்படும், விரைவான குடியுரிமை பரிசோதனை சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.இந்த சேவை தற்போது டில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் தற்போது அமலில் உள்ளது.இது, சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, ஆமதாபாத் விமான நிலையங்களிலும் நேற்று அமலுக்கு வந்தது. நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இச்சேவையை நேற்று துவக்கி வைத்தார்.

இணையதளம்

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணியர் மற்றும் பூர்விக இந்தியர்களாக இருந்து, வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்போர் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.ftittp.mha.gov.in இணையதளத்தில், தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.பெரியவர்களுக்கு கட்டணமாக, 2,000 ரூபாய்; குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய்; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 100 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஒரு முறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதிவரை, அந்த கட்டணம் செல்லுபடி ஆகும். அத்துடன், தங்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கருவிழிகள் போன்றவற்றையும், இணையதளம் வழியே பதிவு செய்ய வேண்டும்.விமானநிலையத்தில் நவீன கருவிகள் உதவியுடன்,அவர்களின் முக அடையாளங்கள், பரிசோதிக்கப்பட்டு, உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில்குடியுரிமை முத்திரை பதிக்கப்படும். பயணியர் வேகமாக, அடுத்த கட்ட சோதனைக்கு சென்று விடலாம். அதேபோல் வருகை பயணிகளும், விரைவாக சோதனை முடித்து, வெளியேறலாம்.இதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நான்கு சிறப்பு கவுன்டர்கள், குடியுரிமை பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, இந்த கவுன்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthik
ஜன 17, 2025 17:25

சிங்கப்பூர் வாசிகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது சிங்கப்பூரில் நடப்பில் உள்ளது. எவ்விதமான கட்டணமின்றி, எவ்வித முத்திரை பதிவுமின்றி குடிநுழைவு / வேளியேற்றம் வெறும் இருபது வினாடிகளுக்குள் முடிக்கலாம்.


Ramesh Sargam
ஜன 17, 2025 12:42

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணம் மிக மிக அதிகம். குறைக்கவேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 11:58

பணம் கட்டி விவரங்கள் பதிவு செய்தாலும், மீண்டும்அதற்கான கவுண்டர்களில், வரிசையில் நேரில் ஆஜராகி பதிவு முத்திரை பெற வேண்டும். அப்போ எதுக்கு கட்டணம்?. கூடுதலா இன்னொரு 30, 40 நிமிடங்கள் கட்டணமில்லா வரிசையில் நின்று பதிவு முத்திரை வாங்கிண்டு போறது? 1 மணிநேரம் சீக்கிரம் போயி கூடுதலா என்ன ஆணி புடுங்கப் போறோம்?? இது தர்ம தரிசனம், 1000 ரூபாய் கட்டண தரிசனம் மாதிரி. ஒரே சாமி தான். ஒரே மாதிரி வரிசை தான். என்ன, காசு குடுத்தா சின்ன வரிசை.


visu
ஜன 17, 2025 15:48

எல்லாத்துக்கும் ஒரு எதிர் கருத்தா ? உங்களுக்கு 1 மணி நேரத்துக்கு 200 ரூபாய் போதும் என்று இருக்கலாம் எல்லாருக்கும் அப்படி இல்லையே


RSaminathan - Thirumangalam
ஜன 17, 2025 10:08

இங்கு வளைகுடா நாடுகளில் இதற்கு கட்டணம் கிடையாது. 100 டாலர், 8000 ரூபாய் என்பது அநியாயம். டிஜிடல் அரசு இலவசமாக தர முடியும். 8000 ரூபாய் வாழ்நாள் முழுதும் என்றால் சரி. பாஸ்போர்ட் ரெனீவல் செய்யும் போதெல்லாம் 8000 ரூபாய் தவறான வசூல்.


karthik
ஜன 17, 2025 12:06

உங்களுக்கு சாதாரண நடைமுறை போதும் என்றால் பணம் கட்ட வேண்டாம்.


Duruvesan
ஜன 17, 2025 09:29

பாஸ் அமீரகத்தில் 15 வருசமா இருக்கு, எத்தனை பாஸ்போர்ட் மாத்துவது, எல்லா ஏர்போர்ட் ல பண்ணா நல்லது


SANKAR
ஜன 17, 2025 08:42

biometric verification already exists under aadhar and we all have aadhar.why duplicate it and charge for that too ?


Ganapathy
ஜன 17, 2025 10:39

ஆதார் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கட்டாயமில்லை. எனவே பாஸ்போர்ட் இதற்கு அவசியம். இதேபோல ஐக்கிய ஒன்றிய அமீரகத்தில் கனடாவில் அமெரிக்காவில் ஸ்மார்ட் கேட்கள் உள்ளன. இது மிகவும் விரைவான சேவை. வெறும் 5 வினாடிகள் முதல் 11 வினாடிகளில் குடியுரிமை அனுமதிக்கும் வேலை முடிந்துவிடும். நம்மைப் போன்ற பெரும் மக்கள் தொகையுள்ள நாட்டுக்கு மிக அவசியமான சேவை இது. ஐக்கிய ஒன்றிய அமீரகத்தில் இந்த சேவைக்காக யாரிடமும் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. எப்பயோ வந்திருக்க வேண்டிய சேவைக்காக இது.


Ganapathy
ஜன 17, 2025 11:04

உலகின் எந்த குடியுரிமை சோதனை அதிகாரியும் பாஸ்போர்ட் அதாவது கடவுச்சீட்டைத்தான் பார்ப்பார்கள். தேசீய அடையாள அட்டைக்குஅங்கு வேலையில்லை. பூடான் நேபாளம் போன்ற நாடுகளில் மட்டும் பாஸ்போர்ட் தவிர வருமானவரி அடையாள அட்டைக்கு டிரைவிங் லைஸென்ஸ்க்கும் மதிப்பு உண்டு.


Samy Chinnathambi
ஜன 17, 2025 08:29

எல்லாருமே அந்த கவுண்டர்களுக்கு போயிட்டா சாதாரண கவுண்டர்களின் கூட்டம் அதிகம் இருக்காது..நல்லது தான்.. எதுக்கு நான் ஒன்னு ரெண்டு தடவை வர்றதுக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும்? கட்டணம் அதிகமா இருக்கு...


பெரிய ராசு
ஜன 17, 2025 10:06

ஒருதடவை கட்டணம் மட்டுமே


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 17, 2025 14:45

இந்தியராக இருந்துகொண்டு வெளிநாட்டுக்கு பணிக்கு சென்று இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்து, விடுமுறைக்கு இங்கு வந்து, நாட்டிற்குள் நுழைவதற்கு கப்பம் கட்டவேண்டும்.


Nandakumar
ஜன 17, 2025 08:16

2000 ருபாய் பெரிய விஷயம் தான். எல்லோரும் உங்களை போல் இல்லை. ஏன் இதை இலவசமாக கொடுத்தால் என்ன?


Kalyanaraman
ஜன 17, 2025 07:40

மக்களுக்கான நல்ல திட்டம். வெளிநாட்டுக்கு போகும் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெரிய பணம் இல்லை, அதுவும் ஒரு முறை கட்டணம். மேலும், லக்கேஜ்களையும் சீக்கிரமாக வெளியே வந்து - எடுத்து செல்ல வசதி ஏற்படுத்தினால் மேலும் நல்லது.


Kasimani Baskaran
ஜன 17, 2025 07:32

அருமை... ஒருவர் உடன் பிறப்பா, சங்கியா அல்லது சொங்கியா என்பதை அடையாளம் கண்டு அறிவித்தால் பொதுமக்கள் குதூகலிப்பார்கள்.. பாமரர் வகையறாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை