ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா, 33; தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய சமையல்காரர். இவர், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், பார்வதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி வைதேகி, 33, மகன்கள் பத்ரி, 8, கவுஷிக், 4, ஆகியோருடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, கணவன் - மனைவி இருவரும் தனித்தனி அறையில் துாங்கினர். மூத்த மகன் பத்ரியை சைதன்யா தன்னுடன் துாங்க வைத்துள்ளார். அப்போது, பத்ரியை துாக்கிட்டு கொலை செய்து விட்டு, சைதன்யா மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு, மொபைல்போன் வாயிலாக நண்பர்களிடம் நடந்தவற்றை கூறி, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மொபைல் போன் சிக்னல் மூலம், மெரினா கடற்கரையில் தற்கொலை செய்ய முயன்ற சைதன்யாவை போலீசார் பிடித்து, சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் ரூபாய் சைதன்யா இழந்துள்ளார். இதனால், கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் கடன் பிரச்னையில் தவித்து வந்துள்ளார். தற்கொலை செய்து கொண்டால், மனைவிக்கு அந்த வேலை கிடைக்கும் என நினைத்த சைதன்யா, தன்னிடம் அதிகம் பாசம் வைத்திருந்த மகன் பத்ரியை கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.---தம்பதி ரூ.29 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், விருதுநகர் ரோடை சேர்ந்தவர் பிச்சைமணி, 52. இவரது மகள் நித்யலட்சுமி. பி.இ., முடித்துவிட்டு, அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். உரிமையாளர் பெரியசாமி, நித்யலட்சுமிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 50 லட்சம் ரூபாய் கேட்டார்.காசோலையாகவும், பணமாகவும் 29 லட்சம் ரூபாயை பெரியசாமி பெற்றார். அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பெரியசாமி, அவரது மனைவி ராமலட்சுமியிடம் கொடுத்த பணத்தை பிச்சைமணி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.---கணவரை கொன்று நாடகம் மனைவியுடன் 4 பேர் கைது
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல், 42. இவரது மனைவி பானுமதி, 28. காதல் திருமணம் செய்த அவர்களுக்கு, 3 வயது மகள் உள்ளார். வேன் டிரைவரான வடிவேல், ஜன., 4ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, மனைவி போலீசில் புகார் அளித்தார். பெட்டவாய்த்தலை போலீசார் பார்த்த போது, வடிவேல் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. வீட்டிலும் ரத்தம் சிதறி கிடந்தது.சந்தேகமடைந்த போலீசார், பானுமதியிடம் விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும், கைவிடுமாறு கண்டித்ததாலும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, வடிவேலை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டது போல ஜோடித்தது தெரிய வந்தது. பானுமதி, அவரது கள்ளக்காதலன் முருகேசன், 35, அவரது நண்பர்கள் சீராத்தோப்பு அருண், சீராஜ்தீன் ஆகிய நால்வரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.---அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் விருதுநகர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி 52. இவரது மகள் நித்யலட்சுமி பி.இ., முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இதற்காக சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். டியூஷன் சென்டர் உரிமையாளர் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி உங்களது மகளுக்கு சார்பதிவாளர் வேலை வாங்கி தருகிறேன், அதற்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என பிச்சை மணியிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய பெரியசாமி அவரிடம் காசோலையாகவும் பணமாகவும் ரூ. 29 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனை தொடர்ந்து பெரியசாமி, அவரது மனைவி ராமலட்சுமியிடமும் கொடுத்த பணத்தை பிச்சைமணி கேட்டதற்கு திருப்பித் தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தனராம். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.---மனைவியை கொன்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் தற்கொலை?
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55, பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவரின் மனைவி கனிமொழி, 46. இவர்களின் மகன் கார்த்திக், 28, அசாம் மாநிலத்தில் விமானப்படையில் பணிபுரிகிறார். இந்நிலையில், தந்தையை நேற்று காலை, 6:00 மணிக்கு கார்த்திக் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். பல முறை அழைத்தும் எடுக்காததால், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து சென்ற உறவினர்கள், கதவை தட்டினர். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால், இரும்பு குழாயால் தாழ்ப்பாளை நெம்பி, கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் தலையில் காயங்களுடன் கனிமொழியும், ஈஸ்வரன் துாக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர். அவர்கள், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கனிமொழி உடல் அருகே ஒரு சுத்தியல் கிடந்தது. கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.---58 பவுன் நகைகள் கொள்ளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமி நகர் 4வது தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எத்திராஜ். இவரின் மனைவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் இரு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்புறம் உள்ள கேட்டின் பூட்டு, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே கப்போர்டில் இருந்த தங்கச்செயின்கள், நெக்லஸ், பிரேஸ்லெட்டுகள், தோடு, மோதிரம் உள்ளிட்ட 58 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது. திருத்தங்கல் போலீசார், தனிப்படையினர் இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.---மம்தா கட்சி நிர்வாகியை கைது செய்ய கவர்னர் ஆர்டர்
மேற்கு வங்கத்தில், விசாரணைக்கு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக கருதப்படும், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை, உடனடியாக கைது செய்யும்படி, போலீசாருக்கு அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.---26 சிறுமியர் மீட்பு மதம் மாற்றியதாக புகார்
மத்திய பிரதேசத்தில், சட்ட விரோதமாக இயங்கி வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமியர் காணாமல் போன நிலையில், அவர்களை போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர். அங்கு வசிக்கும் சிறுமியர் கிறிஸ்துவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.