உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்

அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்

சென்னை: நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அ.தி.மு.க., கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அவரது அறிக்கை:புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம். https://x.com/EPSTamilNadu/status/1933894539925700848அ.இ.அ.தி.மு.க., எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதல்வர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட பட்டாலியனை ஏன் அனுப்ப வேண்டும் ?பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தியை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அ.தி.மு.க., கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அ.இ.அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி தி.மு.க.,-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2025 23:45

பிஜேபி தலைமையிலான கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு பயம் என்று சொல்லுங்கள். இப்படியே போனால், நாளைக்கு தேமுதிகவை பார்த்து திமுகவுக்கு பயம் என்று பிரேமலதாவும் சொல்வார்.


Oviya Vijay
ஜூன் 14, 2025 23:33

2026 தேர்தல் முடிவு வெளியான பின்னே சைக்காட்ரிஸ்ட் மற்றும் பிஸியோதெரபி டாக்டர்களின் தேவை தமிழகத்தில் அதிகரிக்கும் என நினைக்கிறேன்... ஏனெனில் 2026 தேர்தல் நாளில் அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகளை மக்கள் சுளுக்கு எடுத்து தொங்க விட்டிருப்பர்... ஆகையால் மேற்குறிப்பிட்ட டாக்டர்களின் காட்டில் பணமழை தான்... என்ஜோய்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை