உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உட்கட்சி விவகாரங்கள் வெளிவரும் என அச்சம்: நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டாமல் சீமான் தவிப்பு

உட்கட்சி விவகாரங்கள் வெளிவரும் என அச்சம்: நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டாமல் சீமான் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்ட கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. கட்சி துவங்கி 15 ஆண்டுகளில், பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் ஓட்டு சதவீதம் மட்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், நிர்வாகிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். எனவே, 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் பலரும் விரும்புகின்றனர். கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அதே முடிவில் இருந்தார். நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தன் கட்சி மாநாட்டில் பேசிய விஜய், தமிழ் தேசிய அரசியல் கொள்கையை பின்பற்றப் போவதாக அறிவித்தார். அது, அந்த கொள்கையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்த சீமானுக்கு நெருக்கடியாக அமைந்தது. திரள் நிதி என்ற பெயரில் கட்சி வளர்ச்சி நிதி வசூலிப்பதில்பாதிப்பு ஏற்படலாம் என, சீமான் தரப்புக்கு அச்சம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், த.வெ.க., வுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை எனவும், வழக்கம்போல் சொந்த காலில் நிற்க போவதாவும் சீமான் கூறத் துவங்கியுள்ளார். அதனால், லோக்சபா தேர்தலின்போது நடந்த உள்கட்சி பிரச்னைகளும் தற்போது அம்பலமாகி வருகின்றன. அக்கட்சியின் மகளிர் அணி முக்கிய நிர்வாகிகள் இருவர் கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளனர். மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள், சட்டசபை தேர்தலுக்குள் வெளியேறி விடுவர் என, நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். கட்சியினர் விலகுவதற்கான காரணத்தை கண்டறிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என, சீமானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால், இக்கூட்டத்தை நடத்த, சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இவ்விவகாரத்தின் தீவிரத்தை சீமான் புரிந்து கொண்டுள்ளார். ஆனால், அது பற்றி பேச பலருக்கும் வாய்ப்பு தந்தால், உள்கட்சி விவகாரங்களை உடைத்து விடுவர். தேர்தல் நிதி வசூல் தொடர்பான விபரங்களை கட்சி தலைமையும், வேட்பாளர்களும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனர். இந்த பிரச்னையும் பரபரப்பாக எழுப்பப்பட்டால், கட்சியில் கைகலப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சீமான் அஞ்சுகிறார். இதற்காகவே, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த தயங்குகிறார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MADHAVAN
நவ 21, 2024 11:09

இவன் பேசும் பொய்களை எல்லாம் நம்பி ஓட்டுப்போடும் அளவுக்கு தமிழகத்தில் 300000 மடையர்கள் இருப்பதுதான் வேதனை,


Mahen
நவ 21, 2024 12:11

அது 300000 இல்லடா... 3600000. 36 லட்சம்டா. கூமுட்டை எல்லாம் கருத்து சொல்ல கிளம்பி வருது... போய் படிங்கடா. அப்புறம் வந்து சீமான் பற்றி பேசலாம்.


Nallavan
நவ 21, 2024 10:41

எப்பேர் பட்ட பலம் வாய்ந்த தி மு க , அ தி மு க, காங்கிரஸ், இவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும், அனால் ந த க கூட்டணி வைக்காமல் எப்படி வெற்றிபெறும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் தான் இக்கட்சியில் இருப்பார்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 21, 2024 09:24

நல்ல அரசியலை முன்னெடுப்பவர்களை எப்படியாவது ஏதாவது உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி கெடுத்து அதை வரவிடாமல் செய்வதில் நமது ஆட்கள் கில்லாடிகள். அவர் பேசும் அனைத்து உயிர்களுக்கான அரசியலை இதுவரையில் யாரும் பேசவில்லை. மற்ற உயிர்கள் வாழ்ந்தால்தான் மனிதன் வாழ முடியும் என்ற நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், அது போன்ற நல்ல அரசியல் வரவிடாமல் செய்து நமது வருங்கால சந்ததிகளின் வாழ்வை கெடுக்கிறோம். இதில் ஊடகங்களுக்கும் மிகுந்த பங்குண்டு. ஏனென்றால் ஊடகங்களில் வருவதைதான் மக்கள் நம்ப தொடங்குகிறார்கள். நல்லவர்களை ஆதரித்து ஊக்குவிப்போம். அதுதான் எல்லோருக்கும் நல்லது.


Tamilselvan,kangeyam638701
நவ 21, 2024 09:52

ஆமா சீமான் பேசும் அரிசிக் கப்பலை சுட்டது ஆமைக்கறி தின்னது ஈழப் போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் இட்லிக்குள் கறியை வேக வைத்து இவருக்கு டிபன் பரிமாறியது இன்னும் இதுபோல பல நம்ப முடியாத கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டது இதைச் சொல்லியே உன்னைப் போன்ற ஜோம்பி தும்பிகளை வைத்து திரள்நிதி வசூல் பண்ணுவது போன்ற அனைத்து உயிர்களுக்குமான அரசியலை யாருமே இதுவரை பேசவில்லை என்பது உண்மைதான். இந்த சீமான் பேசுவதை எல்லாம் இதுவரை நம்பி வந்த அவருடைய தம்பிகளுக்கு இப்போதுதான் உண்மை தெரிந்து அவரை விட்டு ஓடுகிறார்கள் உன்னைப் போன்ற திரள்நிதி அடிமைகள் மட்டுமே இன்னும் சீமானுக்கு முட்டுக் கொடுத்துகிட்டு இருக்கீங்க கூடிய விரைவில் நீயும் சீமானை விட்டு ஓடப்போவது உறுதி.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 09:12

லெட்டர் பேட் கட்சிகள் கேட்டிருக்கோம், பார்த்திருக்கோம். அசிங்க அசிங்கமா பேசற வாய் மற்றும் வாட்ஸப், youtube மட்டுமே வைத்து ஒரு அநாகரிக பொய்யன் தலைவனா இருக்கிற கட்சி நா த க.


Oviya Vijay
நவ 21, 2024 08:58

இனி இந்த கட்சிக்கு இறங்கு முகம் தான்... இதுவரை இருந்த ஓட்டு சதவீதம் இனி அதல பாதாளத்திற்குச் செல்லும்... கட்சியின் தலைமையே சரியில்லாத போது இனி கட்சியை மீட்டெடுக்க வழியேயில்லை... வாய்ச்சவுடால் செய்வது ஒன்றே கட்சியின் சொத்து... அதற்கும் எண்டு கார்டு போடுவதற்கு நேரம் வந்து விட்டது...


Raj
நவ 21, 2024 08:15

இவரின் தயவு திமுகவிற்க்கு தற்போது தேவையில்லை நடிகர் விஜய் வைத்து மக்களை குழப்பம் செய்வார்கள்


Mohammad ali
நவ 21, 2024 07:43

இவனுக்கெல்லாம் எவன் கட்சி நிதி தாறான்


sara
நவ 21, 2024 18:18

இருக்காங்க என்னை மாதிரி கூமுட்டைங்க நிறைய இருங்காங்க புதுக்கோட்டை தனசேகர்ன்னு மாநில பெறுப்புல இருந்தாப்புடி அவரு சொல்லி தான் பாக்கியராஜன் ட கொடுத்தேன் ஆனா இப்ப அந்த தனசேகரே கட்சியில இல்லை இது தான் கால கெடுமைங்கிறது ஆனா இப்ப மக்கள் திருந்த ஆரம்பிச்சுட்டாங்க அந்த சாட்டை இருக்குர வரைக்கும் நா த க மண்ணுக்குள்ள தான் போகும்


VENKATASUBRAMANIAN
நவ 21, 2024 07:40

சீமானுக்கு வாயே சத்ரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை